Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'தமிழகத்தில் நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களை திறக்க வேண்டும்'- வெற்றி பெற்ற மாணவர் கோரிக்கை

மிழக மாணவர்களின் நலன் கருதி தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீட் தேர்வில் மாநில அளவில் பத்தாம் இடம் பிடித்த கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த மாணவர் ஆனந்த் ராஜ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

மருத்துவ மேற்படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற மத்திய அரசின் உத்தரவுப்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற நீட் தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தம்மத்துகோணம் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஆனந்த் ராஜ்குமார் தேசிய அளவில் ரேங் பெற்று, மாநில அளவில் 630 மதிப்பெண்கள் பெற்று பத்தாம் இடம்பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.

அவருக்கு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பின்னர் கேரளாவில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் மூலம் நீட் தேர்வுக்கான பயிற்சி பெற்றதாகவும், அதன்படி தேர்வு எழுதி மாநில அளவில் பத்தாம் இடம்பிடித்து இருப்பதாகவும் தெரிவித்தார். தமிழக மாணவர்கள் நுழைவுத்  தேர்வை எழுதி வந்த நிலையில், திடீரென நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாததால் அதை எதிர்க்கின்றனர். எனவே ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்தால் அது மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என ஆனந்த் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement