Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு 16 கட்டுப்பாடுகள்... மாவட்ட நிர்வாகம் அதிரடி!

நெல்லை மாவட்டத்தில், விநாயகர் சிலை ஊர்வலத்தை அமைதியாகவும் சுமூகமாகவும் நடத்தி முடிப்பதற்கு ஏதுவாக, 16 கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது.

விநாயகர் சிலை

விநாயகர் சதுர்த்தி விழா, நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, விநாயகர் சிலைகளைப் பல்வேறு அமைப்பினரும் அவரவர்க்கு அனுமதி கொடுக்கப்பட்ட இடத்தில் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்துவார்கள். பின்னர், அவற்றை ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். இந்த நிகழ்ச்சியின்போது, சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் சுமூகமாக இந்த விழாவை நடத்தி முடிக்க, நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவின் பேரில், இந்த விழாவுக்கு 16 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

1. விநாயகர் சிலைகளை வைப்பதற்கு காவல்துறையின் அனுமதி அவசியம்.
2. கடந்த வருடம் வைக்க அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே வைக்க வேண்டும்.
3.நெல்லை மாவட்டத்தில், வரும் செப்டம்பர் 1-ம் தேதி, மாமன்னர் பூலித்தேவன் பிறந்தநாள் விழாவும் 3-ம் தேதி பக்ரீத் விழாவும் வருவதால், சட்டம்-ஒழுங்கை கருத்தில்கொண்டு இந்த ஆண்டு மட்டும் விநாயகர் சிலைகளை வைத்து பூஜைசெய்ய ஆகஸ்ட் 30-ம் தேதி வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.
4.வரும் 30-ம் தேதிக்குள் அனைத்து சிலைகளையும் கரைத்துவிட வேண்டும்.

ஊர்வலம்

5.பாரம்பர்ய முறைப்படி களிமண் மூலமாகவே சிலைகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
6, ஒவ்வொரு சிலைக்கும் 20 பேர் கொண்ட சிலைப் பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்.
7.சிலை பாதுகாப்புக் குழுவினர் பற்றிய விவரங்களை சிலைக்கு அருகில் வைக்க வேண்டும்.
8.விநாயகர் சிலை அமையும் இடத்தில் சி.சி.டி.வி கேமரா வைக்க வேண்டும்.
9.கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது.
10.வழக்கமான ஊர்வலப் பாதையை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
11. ஊர்வலத்தின்போது, பிற மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் கோஷங்களை எழுப்பக்கூடாது.
12.ஊர்வல வாகனத்தில் ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது.

சிலை ஊர்வலம்

13.ஊர்வலப் பாதையில் கைவிடப்பட்ட சிலை இருந்தால், உடனடியாக மாற்று ஏற்பாடு செய்து அப்புறப்படுத்தப்படும்.
14.விநாயகர் ஊர்வலத்தின்போது, சாதிரீதியிலான ரிப்பன், பனியன், கொடி போன்றவற்றைப் பயன்படுத்தக்கூடாது.
15. வீடுகள் மற்றும் தெருக்களில் வைத்திருந்த சிலைகளை, ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்குள் கரைத்துவிட வேண்டும்.
16. அனுமதி இல்லாமல் பொதுக்கூட்டம் நடத்தக்கூடாது.     

இந்த நிபந்தனைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும். இதை மீறும் நபர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது காவல்துறையினரால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement