Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பள்ளிவாசலில் வெடிகுண்டா..? மதுரையில் பரபரப்பு!

 

வெடிகுண்டு

மதுரையில் வெடிகுண்டு மிரட்டல்களும் பெட்ரோல் குண்டு எரியப்படுவதும் உள்ளிட்ட பல  சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறிவருகின்றன . சில  ஆண்டுகளுக்கு முன், மீனாட்சியம்மன்கோயில் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு, மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மதுரை காளவாசல் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் வெடிகுண்டு போன்ற மர்மான பொருள் ஒன்று கிடந்ததால், அச்சத்தை ஏற்படுத்தியது. மதுரை காளவாசலில் உள்ள காஜிமார் ஈத்கா பள்ளி வாசலில், இன்று அதிகாலை 5 மணிக்கு தொழுகை முடிந்த பின்னர், இரு சக்கர வாகன நிறுத்தத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் உருண்டை வடிவப் பொருள் ஒன்று கிடந்துள்ளது. சந்தேகம் அடைந்த பள்ளி வாசல் நிர்வாகத்தினர், எஸ்.எஸ்.காலனி காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். 

அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவல்துறையினர், மர்மப் பொருளைக் கைப்பற்றி ஆய்வு செய்கையில், உருண்டை வடிவ பிளாஸ்டிக் பந்தில் கரிமருந்து வைத்து வீசப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மர்மப் பொருளை, வெடிகுண்டு தடுப்புக் காவல்துறையினர் செயல் இழக்கச் செய்தனர். நாளை, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள சூழலில், இது போன்ற மர்மப் பொருள் வீசப்பட்டது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement