Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஆட்சியை காப்பாற்றுங்கள்'- அதிரடி காட்டும் அ.தி.மு.க எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம்

ஆட்சியை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல, இந்த ஆட்சியை வழிநடத்தி செல்கிறவர்களுக்கும் இருக்கிறது என்று எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் அதிரடியாக கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம். இவர் தினகரன் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் செய்திய அவர், "ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை இந்த கட்சியை ஆட்சிக்கட்டிலில் கொண்டு சென்றவர். ஜெயலலிதா இறுதியாக சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோது, "நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நூறாண்டு காலம் அ.தி.மு.க. தமிழகத்தில் ஆட்சிப்பொறுப்பில் இருக்கும்" என்று கூறினார். இந்த அரசு ஐந்தாண்டு காலம் இருக்கும்படி மக்கள் வாக்களித்துள்ளார்கள். ஜெயலலிதா தற்போது நம்மிடத்தில் இல்லை. ஜெயலலிதா சொன்னபடி இந்த ஆட்சி நூறாண்டு காலம் இருக்க வேண்டும் என்ற வாக்குக்குஏற்ப அ.தி.மு.க.வின் கடைக்கோடி தொண்டனாக நானும் ஆசைப்படுகிறேன்.

இந்த அரசு தொடர்ந்து ஐந்தாண்டு காலத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதுதான் அதிமுக தொண்டர்கள் மட்டுமல்ல மக்களின் ஒட்டுமொத்த விரும்பமும்கூட. இந்த இயக்கம் சாதி மதத்துக்கு அப்பாற்பட்டு இருக்கிற காரணத்தினாலே ஆட்சி பீடத்தில் இருக்கவேண்டும். இந்த ஆட்சி நீடிக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கனவை ஈடுசெய்ய வேண்டிய கடமை என்னைப்போன்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இருக்கிறது. என்னுடைய நிலைப்பாடு அ.தி.மு.க தொடர்ந்து ஆட்சிப்பீடத்தில் இருக்க வேண்டும். அப்போது ஆளுநர் மாளிகையிலே 19 எம்.எல்.ஏ.க்கள் மனுக்கொடுத்திருக்கிறார்கள். மனுக்கொடுத்தவர்கள் அன்றைக்கு கூவத்தூரிலே அ.தி.மு.க ஆட்சி அமைய வேண்டும் என்ற நோக்கத்தோடு இருந்தவர்கள்தான் இன்றைக்கு மனுக்கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் எந்த நோக்கத்தோடு மனுக்கொடுத்திருக்கிறார்கள். அவர்களுடைய மனதில் என்ன பாரமிருக்கிறது. அவர்களுடைய கருத்துக்கள் என்ன. என்பது குறித்து முதல்வர் பழனிசாமி அழைத்துப்பேசி அவர்களுடைய குறைகளை கருத்துக்களை கேட்க வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் அ.தி.மு.க என்பது 135 சட்டப்பேரவை உறுப்பினர்களை கொண்டு ஜெயலலிதாவால் அமைக்கப்பட்ட ஆட்சி. இடையிலே மூன்று அணிகளாக பிரிந்து செயல்படக்கூடிய ஒரு சூழ்நிலை இருந்தது. கடந்த நான்கு நாள்களுக்கு முன்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வரும் கலந்துபேசி அணியை இணைத்திருக்கிறார்கள். மிக்க மகிழ்ச்சி.

அதேபோல் கடந்த காலத்திலே அனைத்து அமைச்சர்களும் என்ன சொன்னார்கள் என்பது உங்களுக்கு (செய்தியாளர்களுக்கு) நன்றாக தெரியும். அ.தி.மு.க என்பது ஒன்றுபட்ட குடும்பம். இது குடும்பத்திலே இருக்கக்கூடிய சண்டை. இது அண்ணன் தம்பி பிரச்னை என்று அனைத்து அமைச்சர்களும் சொன்னார்கள். இன்றைக்கு அ.தி.மு.க ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்துக்கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல, இந்த ஆட்சியை வழிநடத்தி செல்கிறவர்களுக்கும் இருக்கிறது. தற்போது உள்ள சூழ்நிலையில் அதிமுக ஆட்சித் தொடர வேண்டும். தினகரனிடம் முதல்வரும் துணை முதல்வர் பேசி ஆட்சித் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement