லெட்ஸ் ஸ்டார்ட் செல்பி வித் விநாயகர்! #SelfiewithVinayagar #VinayagarChathurthi | Let take selfie with vinayagar

வெளியிடப்பட்ட நேரம்: 18:55 (24/08/2017)

கடைசி தொடர்பு:18:55 (24/08/2017)

லெட்ஸ் ஸ்டார்ட் செல்பி வித் விநாயகர்! #SelfiewithVinayagar #VinayagarChathurthi

ணபதி, விக்னேஸ்வரன், லம்போதரன், வக்ரதுண்டன், பிள்ளையார்,  ஹேரம்பர், தந்திமுகன், பூதகணங்களுக்கெல்லாம் தலைவர், தடைகள் அனைத்தையும் போக்குபவர், தொந்தி உடையவர், நான்கு திருக்கரங்களைக் கொண்டவர், ஐந்தாவது கையாக வளைந்த துதிக்கையைப் பெற்றவர், குழந்தைபோல் வெள்ளைமனம் கொண்டவர், திக்கற்றவர்களுக்கு உதவுபவர், மேலான தலைவர், தந்தத்தை பெற்றவர், ஈசனின் மகன், முதற்கடவுள், ஆனை முகத்தான், தடைகளைத் தகர்ப்பவன், கேட்ட வரம் தரும் பிள்ளைக் குணம் கொண்டவன் என்றெல்லாம் போற்றப்படும் விநாயகர் அனைவரின் விருப்பக் கடவுளாகவும் திகழ்கிறார். பல்வேறு நாடுகளில் பல்வேறு முறைகளில் வழிபடப்பெறுகிறார்.

விநாயகர்

விநாயகர் சதுர்த்தி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது தொந்தியுடன் கூடிய விநாயகப் பெருமானும் அவருக்கு மிகவும் பிடித்த மோதகமும்தான்.  நம் விருப்பங்கள் நிறைவேற இடையூறாக இருக்கும் தடைகளை நீக்கும் வல்லமை மிக்க விநாயகருக்காக மேற்கொள்ளும் விசேஷ விரதம் விநாயகர் சதுர்த்தி விரதம். 

இந்த நன்னாளில் மோதகம், பொரி, சுண்டல், அப்பம், அவல், வெல்லம், வாழைப்பழம், கரும்பு, கம்பு, சோளம், நாவல்பழம், பிரப்பம் பழம்,இலந்தை, ஆப்பிள், சாத்துக்குடி, பேரிக்காய், அதிரசம், எள்ளுருண்டை, கொழுக்கட்டை, கற்கண்டு,  மாதுளை, கொய்யா, நெல்லி, மாம்பழம்,  எலுமிச்சை, விளாம்பழம், புளியம்பழம், தயிர்சாதம், பாயாசம், பொரி உருண்டை ஆகியவற்றை நைவேத்தியமாகப் படைப்பர். 

விநாயகர்

இந்த விநாயகர் சதுர்த்தியை நீங்கள் விகடனோடு சேர்ந்துக் கொண்டாடலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். 

விநாயகர் சதுர்த்திக்காக நீங்கள் அலங்கரித்து வைத்திருக்கும் பிள்ளையாருடனோ, உங்கள் தெருவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் பிள்ளையாருடனோ சேர்ந்து ஒரு செல்பி எடுத்து photocontest@vikatan.com என்ற இமெயிலுக்கு மெயில் அனுப்புங்க.

தோஷம் நீக்கும் 'பாலகணபதி', முகக்களை உண்டாக்கும் 'தருண கணபதி', இறைவழிபாட்டைப் பூரணமடையச் செய்யும் 'பக்த கணபதி', தைரியம், தன்னம்பிக்கை உண்டாக்கும் 'வீர கணபதி', உடல் ஆரோக்கியம் தரும் 'சக்தி கணபதி', கடன் தொல்லை நீக்கும் 'துவிஜ கணபதி', சகல காரியங்களையும் சித்தியாக்கும் 'சித்தி கணபதி', பதவி உயர்வு அளிக்கும் 'உச்சிஷ்ட கணபதி', விவசாயத்தை விருத்தியாக்கும் 'விக்னராஜ கணபதி', கல்வி அறிவை பெருக்கும் 'க்ஷீப்ர கணபதி', புகழை உண்டாக்கும் 'ஹேரம்ப கணபதி', பணம், பொருள் அபிவிருத்தியாக்கும் 'லட்சுமி கணபதி', தொழில் விருத்தியாக்கும் 'மகா கணபதி', வெற்றியை உண்டாக்கும் 'புவனேச கணபதி', சங்கீத வல்லமையைத் தரும் 'நிருத்த கணபதி', இல்வாழ்க்கையை இன்பமாக்கும் 'ஊர்த்துவ கணபதி' என பல்வேறு வடிவங்களில் பல்வேறு வரங்களை அருளும் விநாயகப் பெருமானைக் கைதொழுதால் அனைத்து நன்மைகளும் உண்டாகும் என்பது உறுதி.


[X] Close

[X] Close