Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தினகரன் அணியில் மேலும் ஒரு எம்.எல்.ஏ!

அ.தி.மு.க-வில் மீண்டும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களாக பிரிந்திருந்த பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாள்களுக்கு முன்பு இணைந்தனர். இதையடுத்து, பன்னீர்செல்வம் அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.

தினகரன்


இந்தச் செயல் சசிகலா குடும்பத்தை கோபப்படுத்தியது. குறிப்பாக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் ஆளுநரைச் சந்தித்தனர். அப்போது, எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, ஆளுநரிடம் கடிதம் வழங்கினர். மேலும், தமிழக முதல்வரை மாற்றவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


இதைத்தொடர்ந்து, டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் புதுச்சேரியில் உள்ள விண்ட் ஃபிளவர் ரிசார்ட்டில் தங்கியுள்ளனர். குறிப்பாக, தினகரன் அணிக்கு ஏற்கெனவே 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருந்தது. இதனிடையே, சசிகலா மற்றும் தினகரனை கட்சியை விட்டு நீக்கக் கூடாது என்று அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி தெரிவித்திருந்தார். 


இந்நிலையில், சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டில் அவரை ரத்தினசபாபதி சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். இதன்மூலம், தற்போது அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement