Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகா் ஆலய தேரோட்டம்!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகா் ஆலய தேரோட்டம்.

 

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு கற்பகவிநாயகா் ஆலயத்தில் 9 ம் நாள் திருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்ட விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து விநாயகா் பெருமானை வழிபட்டு சென்றனா்.

பிள்ளையார்பட்டியில் விநாயகா் சதுர்த்தி பெருவிழா ஆண்டுதோறும் பத்து நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு இவ்விழாவை முன்னிட்டு கடந்த 16 ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. 9-ம் நாள் நிகழ்ச்சியான இன்று மாலை தேரோட்ட விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் நடைபெறும் சந்தன காப்பு அலங்காரத்தில் மூலவா் கற்பக விநாயகா் பக்தா்களுக்கு அருள்பாலித்தார். இதனை தொடா்ந்து உற்சவர் விநாயகா் சா்வ அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரிலும், சிறிய தேரில் சண்டிகேஸ்வரா் எழுந்தருள, நான்கு ரத வீதிகளில் வழியாக பக்தா்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனா். இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து விநாயக பெருமானை வழிபட்டனா்.

நாளை 10-ம் நாள் திருவிழாவான விநாயகா் சதூர்த்தி விழா அன்று காலையில் கோயில் முன்பு உள்ள திருக்குளத்தில் திர்த்தவாரி நிகழ்ச்சியும், மூலவருக்கு ராட்சஷ கொலுக்கட்டை படைக்கும் நிகழ்வும் நடைபெறும். அன்றைய தினம் விநாயகா் பெருமானை தரிசிக்க தமிழகம் முழுவதும் லட்ச கணக்கான பக்தா்கள் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement