பிச்சை எடுத்துக்கொண்டிருந்த மூதாட்டியை மிரட்டி பணம் பறித்த காவலர் கைது! #video | Jammu and Kashmir cop snatching money from old age beggar

வெளியிடப்பட்ட நேரம்: 03:22 (25/08/2017)

கடைசி தொடர்பு:03:22 (25/08/2017)

பிச்சை எடுத்துக்கொண்டிருந்த மூதாட்டியை மிரட்டி பணம் பறித்த காவலர் கைது! #video

சாலையின் ஓரத்தில் அமர்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருந்த மூதாட்டியை மிரட்டி பணம் பறித்த தலைமை காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாட்டியிடம் பணம் பறிக்கும் தலைமை காவலர்

(image source from youtube)

ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரம்பன் மாவட்டத்தில் சாலையின் ஓரத்தில் மூதாட்டி ஒருவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். முனாவர் ஹுசைன் என்ற தலைமை காவலர் அந்த வழியாக சென்றுள்ளார். அப்போது சாலையின் ஓரத்தில் அமர்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருந்த மூதாட்டியின் அருகில் சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பணம் தரமாட்டேன் என்று மூதாட்டி சொல்லியுள்ளார். அதற்கு அந்த மூதாட்டி வைத்திருந்த பொருள்க்களை காலால் எட்டி உதைத்தும், மிரட்டியும் வலுகட்டாயமாக பணத்தை பிடிங்கி கொண்டார். அந்த பாட்டி கை எடுத்து கும்பிட்டும், காலை தொட்டு கும்பிட்டும் பணத்தை கேட்டுள்ளார். ஆனால் அந்த காவலர் பணத்தை தரவில்லை. 

பாட்டியிடம் பணம் பறிக்கும் தலைமை காவலர்

(image source from youtube)

தலைமை காவலரின் இந்த கேவலமான செயலை அருகில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர். காவலரின் இந்த அருவருக்கத்தக்க செயல் காவல்துறை உயரதிகாரிகளுக்கு தெரியவர முனாவர் ஹுசைனை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டிருக்கின்றனர். இதனால் தற்போது அந்த காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும்கைது செய்யப்பட இந்த தலைமை காவலர் மது அருந்துதல் போன்ற பழக்கத்தினால் வேறொரு ஊரிலிருந்து மாற்றலாகி இங்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.