Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னையில் பரவலாக மழை..!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதலே லேசான மழை பெய்துவருகிறது. 


கோடை காலம் முடிந்து, தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. ஆரம்பத்தில் சற்று வெப்பம் குறைந்து, மழைப் பொழிவு இருந்தது. ஆனால், கடந்த சில வாரங்களாக சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில நேரங்களில் மழை பெய்தாலும், தொடர்ச்சியாக மழை இருப்பதில்லை. ஏற்கெனவே தென்மேற்கு பருவமழை சராசரி அளவைவிட 38 சதவிகிதம் குறைவாக பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. சென்னையில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்த நிலையில் இன்று அதிகாலையிலிருந்து சென்னை ராயப்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, திருவான்மியூர், வேளச்சேரி, கிண்டி, அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்துவருகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement