Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்று முதல் புழக்கத்துக்கு வருகிறது புதிய 200 ரூபாய் நோட்டுகள்..!

புதிய இருநூறு ரூபாய் நோட்டுகள் இன்று முதல் புழக்கத்துக்கு வரவுள்ளது. ரிசர்வ் வங்கிகள் மற்றும் தேசிய வங்கிகளின் மூலம் இன்று முதல் மக்களுக்கு புழக்கத்துக்கு வரவுள்ளது. 


பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் ரிசர்வ் வங்கி 500, 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் இன்று முதல் புதிய 200 நோட்டுகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த 200 நோட்டுகள் ஆரஞ்ச் மற்றும் மஞ்சள் நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டின் முன்பக்கதில் காந்தி உருவமும் பின்புறத்தில் சாஞ்சி ஸ்தூபி படமும் இடம்பெற்றுள்ளது. ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பு கோடுகள் நீல நிறத்தில் உள்ளது.

முன்பக்கத்தின் வலது கீழ்புறத்தில் அசோகச் சக்கரமும் பின்புறத்தில் ஸ்வச் பாரத் இலச்சினையும் இடம்பெற்றுள்ளது. இந்த நோட்டில் தேவநாகரி எழுத்தில் 200 ரூபாய் என்று எழுதப்பட்டுள்ளது. புதிய 500 மற்றும் 2,000 நோட்டுகளில் தேவநாகரி எழுத்துகள் இடம்பெற்றிருந்தது சர்ச்சையைக் உருவாக்கியிருந்த நிலையில் இந்த புதிய 200 நோட்டுகளிலும் தேவநாகரி எழுத்து இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 2000 ரூபாய் நோட்டுகளுக்கும் மற்ற நோட்டுகளுக்குமிடையிலான இடைவெளியை இந்த 200 நோட்டுகள் குறைக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement