Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜயகாந்த்துக்கு தமிழிசை, வைகோ நேரில் சென்று வாழ்த்து!

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்துக்கு மிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மற்றும் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். 


தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்தின் பிறந்தநாள் விழா கோயம்பேட்டிலிருக்கும் அவரது கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டுவருகிறது. விஜயகாந்த், அவரது பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக அறிவித்து கொண்டாடிவருகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தே.மு.தி.க, ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட்டன.

இருப்பினும் அந்தக் கூட்டணி ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. அதனால் மக்கள் நலக் கூட்டணியிலிருந்து அனைத்து கட்சிகளும் வெளியேறின. அந்தத் தேர்தலின் தோல்வியால் விஜயகாந்த்துக்கும் வைகோவுக்கு மனக்கசப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டுவந்தது. இந்தநிலையில், விஜயகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு வைகோ இன்று அவரை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அப்போது, மல்லை சத்யா உள்ளிட்ட ம.தி.மு.க நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதேபோல், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜனும் விஜயகாந்த்தை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அப்போது, விஜயகாந்த் மனைவி பிரேமலதா மற்றும் பாஜக நிர்வாகிகள் உடனிருந்தனர். அதேப்போல விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement