வெளியிடப்பட்ட நேரம்: 14:05 (25/08/2017)

கடைசி தொடர்பு:14:05 (25/08/2017)

உதயச்சந்திரன் அதிகாரம் குறைப்பு! கல்வியாளர்கள் அதிர்ச்சி

பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் உதயச்சந்திரனின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் அவருக்கும் மேல் பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளராக பிரதீப் யாதவை நியமித்திருக்கிறது தமிழக அரசு. நீதிமன்றம் தடை உத்தரவு காரணமாக உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். பாடத்திட்டங்கள் தயாரிப்புக் குழுவில் மட்டுமே பணியை மட்டும் ஒதுக்கி இருக்கிறது தமிழக அரசு. இதன்மூலம் இனிவரும் காலங்களில் உதயச்சந்திரன் பிரதீப் யாதவ் ஐ.ஏ.எஸ். கீழ் செயல்பட வேண்டும். உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் பதவியிலிருந்து மாற்றியிருப்பது கல்வியாளர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உதயச்சந்திரன்


கடந்த மார்ச் மாதம் உதயச்சந்திரன் பள்ளிக்கல்வி துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டதிலிருந்து பள்ளிக் கல்வியில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தார். இந்த நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் எதிர்பார்ப்புக்கு அசைந்துக்கொடுக்கவில்லை என்பதால், உதயச்சந்திரனை பள்ளிக் கல்வித்துறையில் இருந்து மாற்றுவதில் அதிக கவனம் செலுத்தி வந்தார்கள். இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உதயச்சந்திரனைப் பாடத்திட்டங்களை முழுமையாக மாற்றி அமைக்கும் வரை, மாற்றி அமைக்கக் கூடாது என்று மாற்றத்துக்குத் தடை விதித்தது. தற்போது அவரைப் பள்ளிக் கல்வித் துறையிலிருந்து கீழிறக்கி பாடத்திட்டங்கள் மாற்றங்களுக்கான குழுவில் மட்டும் செயலாளராக மாற்றி இருக்கிறது தமிழக அரசு.