Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'அதிகாரம் கையில் இருக்கிறது என்கிற திமிரில்...'- முதல்வரை சாடும் நாஞ்சில் சம்பத்

அ.தி.மு.க-வின் தினகரன் அணி எம்.எல்.ஏ-க்கள் புதுச்சேரியில்  தனியார் ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் அ.தி.மு.க அம்மா அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

நாஞ்சில் சம்பத்

செய்தியாளர்கள் மத்தியில் நாஞ்சில் சம்பத், 'நாள்தோறும் எங்கள் அணியினருக்கு அச்சுறுத்தல் வந்த வண்ணம் இருக்கின்றது. காவல்துறை தன் கையில் இருக்கிறது என்ற அதிகார திமிரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எல்லை தாண்டுகிறார். குறிப்பாக என்னை செல்போனில் வாயில் சொல்ல முடியாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்கின்றனர். ஆற்றங்கரையில் நிற்கும் மரத்துக்கு ஆயுள் மிகக்குறைவு. எடப்பாடி பழனிசாமி அரசுக்கும் இதே நிலைதான் ஏற்படும்' என்று எச்சரிக்கை விடுத்தார்.

பரபரப்பான அரசியல் சூழலில் டி.டி.வி.தினகரன் புதுச்சேரியில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ-க்களை நேரில் சென்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதனை எம்எல்ஏ செந்தில் பாலாஜி மறுத்துள்ளார். அதே நேரத்தில், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர்களுடன் தற்போது ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் வந்துள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement