Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விநாயகர் சதுர்த்ததி பாதுகாப்பு... 10 நாட்களுக்கு முன்னரே தயாரான போலீஸார் !

                                          விநாயகர்

ரபரப்புடன் வந்தாலும் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல், ஆண்டுதோறும் நேர்த்தியாய் நகர்கிறது விநாயகர் சதுர்த்தி விழா. சென்னைப் பெருநகரப் போலீஸார் இதற்கான முன்னேற்பாடுகளைப் பத்து நாள்களுக்கு முன்னதாகவே திட்டமிட்டுவிடுவதுதான் நேர்த்திக்குக் காரணம். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா, இன்று (25-ம் தேதி) கொண்டாடப்படுகிறது.பொதுமக்கள் வீதிதோறும் வைத்து வணங்கும் விநாயகர் சிலைகள் தவிர, தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் விநாயகர் சிலைகளைவைக்க இந்து முன்னணி முடிவு செய்துள்ளது.''எத்தனை சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளன... சிலைகள் கரைப்புக்கான பாதுகாப்பு அம்சங்கள் எப்படிச் செய்யப்பட்டுள்ளன'' என்று போலீஸ் தரப்பில் கேட்டோம். "சென்னை மாநகர் முழுவதும் 2,691 பெரிய சிலைகளை வைப்பதற்குக் கடந்த ஆண்டு அனுமதி வழங்கியிருந்தோம். இந்த ஆண்டுக்கான பட்டியல் இன்னும் முழுமையாகவில்லை. கடந்த ஆண்டைவிடப் பத்து அல்லது இருபது சிலைகள், கூடக்குறைய இருக்கலாம். ஆண்டுதோறும் குறிப்பிட்ட இடத்தில் சிலைகளை வைக்கும் அமைப்புகள், அதை முறையாகக் கடைப்பிடித்தால் பிரச்னைகள் எழ வாய்ப்பில்லை.  புதிதாகச் சிலைவைப்பது, புதிய இடங்களைச் சிலை அமைப்புக்காகக் கோருவதுதான் சங்கடம் தருகிறது. சிலைகள் வைக்கப்படும் இடங்களுக்கு ஏற்கெனவே பாதுகாப்பில் இருக்கும் மூவாயிரம் போலீஸாரோடு கூடுதல் போலீஸையும் பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டியது வரும். சிலைகள் ஊர்வலத்துக்குக் கடந்த ஆண்டுபோலவே இப்போதும் நான்கு நாள்களுக்கு அனுமதி வழங்கப்படும். பெரிய சிலைகளை வைக்க மட்டுமே, போலீஸ் அனுமதியைக் கேட்பார்கள். சிறிய சிலைகளை தெருக்களில் வைக்க அனுமதி தேவையில்லை. அதேவேளையில், விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் விழாக் குழுவினர் 24 மணி நேரமும் அங்குள்ள போலீஸாருடன் இணைந்து கண்காணிப்பில் இருக்க வேண்டும். சிலைக்கு மேலே அமைக்கப்படும் கூரைகள், தீப்பிடிக்காத அளவில் அமைக்கப்பட வேண்டும். ஊர்வலத்தின்போது மத உணர்வைப் புண்படுத்தும் வகையிலான கோ‌ஷங்களை விழாக் குழுவினர் எழுப்பக் கூடாது. பட்டாசு வெடிப்பதோ, அதைப் பொது இடத்தில் வீசுவதோ கூடாது. சென்னையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐந்து இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்கவேண்டும். சிலையின் அதிகபட்ச உயரம் 30 அடிக்கு மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். போலீஸ் அனுமதி பெறாமல் பொது இடங்களில் சிலை வைப்பதை தவிர்ப்பது நல்லது என்று சொல்லியிருக்கிறோம்'' என்கிறார்கள் சென்னைப் போலீஸார். 

 

                                                     விநாயகர்

சென்னையில் நீலாங்கரை பல்கலை நகர், பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், எண்ணூர் ராமகிருஷ்ணா நகர், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் மற்றும் காசிமேடு மீன்பிடித் துறைமுகம் கடற்கரைப் பகுதி ஆகிய ஐந்து இடங்களில் சிலைகளைக் கரைக்க போலீஸார் அனுமதி வழங்கியுள்ளனர். அப்படிக் கரைக்கப்படும் சிலைகளில் ரசாயனக் கலப்புடன் கூடிய வண்ண விநாயகர் சிலைகள் இருந்தால் ஆண்டுதோறும் கரைப்புக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி - மாசுக் கட்டுப்பாட்டுத் துறை, " 'ரசாயனப் பூச்சு கொண்டு தயாரிக்கப்பட்ட சிலைகளைக் கடலில் கரைக்க அனுமதி இல்லை' என்று ஏற்கெனவே சென்னை மாநகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் தரப்பிலிருந்து அனைத்து அமைப்புகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதை மீறாமல் கடல்வாழ் உயிரினங்களைக் காப்பதோடு, சுற்றுச்சூழலையும் மாசுபடாமல் காக்கவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்" என்று அவர்கள் பதிலளித்தனர்.நம்பிக்கையுள்ள மக்களுக்கு காக்கும் கடவுளாக இருக்கிறவர் விநாயகர்... நம்பிக்கை இருந்தாலும், இல்லாமல் போனாலும் மக்களைப் பாதுகாப்பது போலீஸ்! அவர்களுடைய பாதுகாப்பு விதிகள் அனைத்தும் மக்களைக் காக்கத்தான் என்று மக்கள் உணர்ந்தால், பாதுகாப்போடு கொண்டாடலாம் விநாயகர் சதுர்த்தியை.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement