Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'தினகரன் ஒரு செல்லாக்காசு!' - திட்டித் தீர்க்கும் திண்டுக்கல் மருதராஜ்

அ.தி.மு.க மாவட்ட செயலாளர்களையும், அமைச்சர்களையும் கட்சியை விட்டு நீக்கியதாக தினகரன் தினமும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் இன்று திண்டுக்கல் மாவட்ட செயலாளராக இருக்கும் முன்னாள் மேயர் மருதராஜ் அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

Marutharaj



இதுவரை ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த திண்டுக்கல் மாவட்ட கழகத்தை இரண்டாக பிரித்து, கிழக்கு மாவட்டம், மேற்கு மாவட்டம் எனவும் பிரித்து அறிவுறுத்தியுள்ளார். அதன்படி திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக நிலக்கோட்டை எம்.எல்.ஏ வான தங்கத்துரையையும், மேற்கு மாவட்ட செயலாளராக நல்லசாமியையும் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக மருதராஜிடம் பேசினோம். ‘‘ தினகரன் ஒரு செல்லாக்காசு..ஒரு செல்லாத நோட்டு, உண்மையான நோட்டைப் பார்த்து, செல்லாது செல்லாதுனு சத்தம் போடுற மாதிரிதான் இந்த அறிவிப்பு. இதனால் கட்சியில் எந்த பாதிப்பும் இல்லை. அம்மாவால் மாவட்ட செயலாளராக ஆக்கப்பட்ட நான், ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளராக தொடர்கிறேன். கட்சியில் இருந்து ஒருவரை நீக்க பொது செயலாளருக்குத் தான் அதிகாரம் இருக்கிறது. தற்போது பொதுச்செயலாளராக இருப்பதாக சொல்பவர் சிறையில் இருக்கிறார். சிறையில் இருக்கும் ஒருவர், எப்படி தினமும் உறுப்பினர்களை நீக்க முடியும். அவரிடம் டிவி இருப்பதால், தினமும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு, வேடிக்கை காட்டிக்கொண்டு இருக்கிறார். இதுவரை இவர் நீக்கியதாக அறிவித்த அனைவரும் கட்சியில் இருக்கிறார்கள். இவரது அறிவிப்பு அதிமுக எங்களை கட்டுப்படுத்தாது. தொண்டர்கள் அனைவரும் எங்கள் பின்னால் தான் இருக்கிறார்கள். தினம் ஒரு அறிவிப்பு மூலமாக தமிழக மக்களை சிரிக்க வைத்துக்கொண்டிருக்கிறார் தினகரன். அதைத் தவிர அவரது அறிவிப்பால் வேறு எந்த விளைவும் ஏற்படப்போவதில்லை. விரைவில் பொதுக்குழு கூடி ஒரு நல்ல முடிவை எடுக்க இருக்கிறோம்‘‘ என்றார்.

Thangadurai

நிலக்கோட்டை எம்.எல்.ஏவும், தினகரன் ஆதரவாளருமான தங்கத்துரையிடம் பேசினோம். ‘‘ நானெல்லாம் மாவட்ட செயலாளர் ஆவேன்னு கனவுலக்கூட நினைச்சுப் பார்க்கலை. என்னை மாதிரி சாமானியமான ஆளுங்க அந்த பதவிக்கு வர்றதுக்கு எவ்வளவு கஷ்டப்படணும்னு உங்களுக்கே தெரியும். ஆனா, கழகத்தின் பொதுச்செயலாளர் சின்னம்மா ஒப்புதலோடு, துணைப்பொதுச்செயலாளர் தினகரன் அண்ணன் எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்திருக்காரு. என்னை மாவட்ட செயலாளரா அறிவிச்சதுக்கூட எனக்குத் தெரியாது. வாழ்த்துச் சொல்லி போன் வந்த பிறகுதான் எனக்கே தெரியும். அதுக்கு பிறகுதான் டிவியைப் போட்டு பார்த்தேன். என்னோட தொகுதி மட்டுமில்லாம, மாவட்டம் முழுக்க இருந்து நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து சொல்லிட்டே இருக்காங்க. என்னால போனை கீழே வைக்கவே முடியவில்லை. தொடர்ந்து போன்ல வாழ்த்து சொல்லிகிட்டே இருக்காங்க. என்மேல நம்பிக்கை வெச்சு, அண்ணன் கொடுத்திருக்க இந்த பொறுப்பை சிறப்பா செயல்படுத்துவேன்’’ என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement