Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'கடந்த 50 ஆண்டுகளாக நமது  வரலாற்றில் மோசடி நடக்கிறது'- எழுத்தாளர்  சு.வெங்கடேசன்

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் நேஷ்னல் புக் டிரஸ்ட்  இணைந்து மாபெரும் புத்தகத் திருவிழாவை நடத்திக் கொண்டிருக்கிறது. வேலூர் ரோடு, அண்ணா நுழைவு வாயில் அருகில் உள்ள ஈசானிய மைதானத்தில் மாபெரும் புத்தகத் திருவிழா கடந்த 18-ம் தேதி தொடங்கி  28-ம் தேதி வரை நடக்கிறது. 7-வது நாள் நிகழ்வில் மாலையில் சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர்  சு.வெங்கடேசன் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார். அவர் பேசும்போது, தமிழகத்தில் பல ஆண்டுகளாக பல துயரங்கள்  திட்டமிட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. புத்தக வாசிப்பு, அதிகாரத்தில் இருப்பவர்களை எதிர்த்துக்கொண்டே இருக்கும். இப்போது வாசிப்பு அரசியல் கேள்வி எழுப்புகிறது. வாசிப்பு கலை என்கிற விஷயம் மனித மனதின் செயல்பாட்டின் மூலம் நிகழ்த்தப்படுகிறது. அதனைத்தான் இலக்கியங்கள் செய்கிறது.

இயற்கை அடுத்த தலைமுறைக்கு கடத்த மறப்பது இந்த தலைமுறையில் பெற்ற அறிவையும், அனுபவத்தையும்  தான். இதனை இன்னும் கண்டுபிடிக்க முடியாதது மனிதனின் சாதனை. அப்படி கண்டுபிடிக்க முடியாததில் ஒன்று  புத்தக வாசிப்பு. இயற்கையை வெல்லும் மகத்தான ஆயுதம் புத்தகம். எல்லா காலமும் அறிவு கைமாறிக் கொண்டே இருக்கும்.எழுத்துக்கு அடித்தளமிட்ட சமூகம் தமிழ்சமூகம். உலகில் அதிகமான கல்வெட்டுகள் இருக்கிற நாடு இந்தியா. அதில் சுமார் 65 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழகத்தில் இருக்கிறது. இவைகள் மிகவும் பழமையான கல்வெட்டுகள். கீழடி பற்றி பல விவாதங்களும் எழுகிறபோது, எழுத்தும், அறிவும், கல்வியும்  எப்படி அந்த காலத்தில் வந்தது என்கிற புள்ளியில் வந்து நிற்கும். வாசிப்பு வரலாற்றின் பக்கங்களைத் திறக்கும். பழங்காலத்தில் செல்வந்தர்களைவிட அடித்தள மக்களிடம் தான் கல்வியும், எழுத்தும் இருந்திருக்கிறது. எழுத்தின்மீது அதிகாரத்தின் மேல் இருப்பவர்களுக்கு பயம் எல்லா காலங்களிலும் இருந்துகொண்டிருக்கும்.

தமிழகத்தில் பானை ஓட்டில் எழுத்தப்பட்டவை கிடைத்துள்ளது, அது சாமானியன் பயன்படுத்தியதுதான். தமிழகத்தின் பெண் கல்வி உச்சத்தில் பண்டய காலத்தில் இருந்திருக்கிறது . உலகத்தின் பழமையான மொழி கிரேக் என்று சொல்கிறார்கள். அங்கு பழம் இலக்கியங்களில் சொல்படும் பெண் எழுத்தாளர்கள் ஏழு பேர். ஆனால், தமிழகத்தில் 46 பெண் எழுத்தாளர் இருந்துள்ளனர். கீழடியில் 50 சென்ட் இடத்தில் அகழ்வாராய்வு நடந்ததில் 72 பானை ஓடு எழுத்துகள் இருந்துள்ளன. கல்வி எழுத்தில் நிமிர்ந்து நின்றோம் என்கிறது வரலாறு. எழுத்து மரபு நம்மிடம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது. ஆணையும் பெண்ணையும் பெண் நட்பையும் சொல்வது தமிழ் இலக்கியம்தான். எழுத்து கல்வி உயரும்போது சமூக சிந்தனைகளும் உயரும். பழமையான தமிழ். அது மொழி, அறிவு எல்லாவற்றையும் தன்னகப்படுத்திக் கொள்ளும். சாமானியன் கூட பல மொழிகளை கற்றவனாக தான் இங்கிருக்கும் இலக்கியங்கள் நமக்கு உணர்த்துகிறது. படிப்பு வாசிப்பு இரண்டாயிரம் ஆண்டு ஆணிவேர். அதனை மீட்டெடுக்க வேண்டும். எழுத்தையும் பண்பாட்டையும் மீட்டெடுக்கும் காலம் இதுதான்.. வரலாறு, இலக்கியங்களை மீள் வாசிப்பு செய்ய வேண்டும். மிகப் பெரிய அரசியல் நமது பண்பாட்டின் மீது செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளாக நமது  வரலாற்றில் மோசடி நடக்கிறது. தமிழக வரலாற்றையும் மரபையும், அறிவியல் வளர்ச்சியைக் காப்பற்ற வேண்டும். இது பொதுநலப் பணி. இலக்கியத்தின் மூலம் விட்ட மரபை மீண்டும் பெறுவோம் என்று பேசினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement