நீட் அடிப்படையில் நடந்த மருத்துவ கலந்தாய்வின் முதல் நாள் ரிப்போர்ட்!

நீண்ட சர்ச்சைகளுக்குப் பிறகு தற்போது தமிழகத்தில் நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. நேற்று முதல், பொது பிரிவு மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு  சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நடந்தது. 

நீட்


முதல் நாள் சிறப்புப் பிரிவினருக்கு கலந்தாய்வுகள் நடைபெற்ற நிலையில், நேற்று பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது. முதல் கட்ட கலந்தாய்வின் முதல் நாள், 1,209 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இதில், 1,077  மாணவர்கள் கலந்துகொண்டு தங்களுக்கு விருப்பமான பாடப் பிரிவுகளைத் தேர்ந்தெடுத்தனர். முதல் நாள் கலந்தாய்வில் 132  பேர் கலந்துகொள்ளவில்லை. கலந்துகொண்ட மாணவர்களில் 987 பேர் அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தேர்ந்தெடுத்தனர். அதேபோன்று 22 மாணவர்கள் இ.எஸ்.ஐ கல்லூரிகளைத் தேர்ந்தெடுத்தனர். சுயநிதி கல்லூரிகளில் 19 மாணவர்கள் சேர்ந்தனர். 

கலந்தாய்வின் முதல் நாளில் பல் மருத்துவத்தில் சேர மாணவர்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. ஒரே ஒரு இடம்தான் பல் மருத்துவத்தில் நிரப்பப்பட்டுள்ளது. கலந்தாய்வில் கலந்துகொண்ட மாணவர்களில், 1,029 மாணவர்களுக்கு கல்லூரிகள் ஒதுக்கப்பட்டது. 8 மாணவர்கள் காத்திருப்புப் பட்டியலில் உள்ளனர். இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் கலந்தாய்வு நடைபெறுகிறது. நீட் அடிப்படையில் அவசர அவசரமாக நடத்தப்பட்டுவரும் கலந்தாய்வால் குளறுபடிகள் அதிகரித்துள்ளது என்று மாணவர்களும் பெற்றோர்களும் குற்றம் சாட்டினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!