Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆளுநரை சந்திப்பாரா முதல்வர்?!

தமிழகத்தில் நிலவும் பரப்பரப்பான அரசியல் சூழலில் தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர்ராவ் இன்று சென்னை வருகிறார்.

கவர்னர் வித்யாசாகர்ராவ்

அ.தி.மு.க-வின் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அணியினர் இணைந்தையடுத்து, டி.டி.வி அணியினர் அதிருப்தியில் உள்ளனர். இதனால், டி.டி.வி அணியைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏ-க்கள்  கடந்த செவ்வாய்கிழமையன்று கவர்னரை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என கூறி கடிதம் கொடுத்தனர். இதையடுத்து, அவருடைய ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் புதுச்சேரி ஓட்டலில் தங்கிவிட்டனர். மேலும் 3 எம்.எல்.ஏ-க்களும் தினகரனுக்கு ஆதரவளித்துள்ளனர். இதனால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, "சட்டசபையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்" என்று ஏற்கெனவே எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கடிதம் அனுப்பினார். நேற்று மீண்டும் அறிக்கை மூலம் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளார். அதேபோல, மற்ற கட்சிகள் தொடர்ந்து அ.தி.மு.க. அரசு தனது பெருபான்மையை சட்டசபையில் நிரூபிக்க வேண்டும் என்றும் கேட்டுகொண்டுள்ளார். 

இந்த பரபரப்பான அரசியல் சூழலில் தமிழகத்தில் ஆட்சி கவிழுமா, கவர்னர் ஆட்சி அமல்படுத்தபடுமா என்பன போன்ற பல்வேறு விவாதங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில், கவர்னர் வித்யாசாகர் ராவின் சென்னை வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர், முதலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அழைத்து பேசி விளக்கம் கேட்பார் என்றும், அதன் பிறகே முடிவு செய்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement