Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமெரிக்காவில் 'ஹார்வி புயல்' பேரழிவை ஏற்படுத்தும்... வானிலை மையம் கணிப்பு!

 

மெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியில் உருவாகியுள்ள 'ஹார்வி புயல்' வலுவடைந்துள்ளதால் அது கரையைக் கடக்கும்போது பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஹார்வி புயல்

அமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடா பகுதியில் உருவாயுள்ள 'ஹார்வி புயல்' வலுவடைந்துள்ளது. இந்த புயல் இன்று அல்லது நாளை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புயலானது மணிக்கு 160-200 கி.மீ வேகத்தில் டெக்சாஸ், கார்ப்பஸ் கிறிஸ்டி நகரங்களில் பேரழிவை உருவாக்கும். மேலும் 97 செ.மீ வரை மழை பெய்யும். இந்தப் புயலால் 12 அடி உயரம் வரை கடல் அலைகள் எழும் எனவும் புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

இந்த 'ஹார்வி புயல்' பேரழிவை உருவாக்கும் என்பதால் பேரிடர் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ வளைகுடா பகுதிகளில் வாழும் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனால் பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் அனைத்துக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மின் உற்பத்தி நிலையங்களும் மூடப்பட்டன. கடந்த 2005-ம் ஆண்டு 'வில்மா' புயலால் ஃபுளோரிடா மாகாணம் பலத்த சேதத்துக்கு உள்ளானது. அதன்பின் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது உருவாகியுள்ள இந்த 'ஹார்வி புயல்' மக்கள் அனைவருக்கும் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement