முதல்வர் தலைமையில் கூடப்போகும் அ.தி.மு.க எம்.எல்.ஏ மற்றும் எம்.பி-க்கள்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னையில் வரும் 28-ம் தேதி அ.தி.மு.க எம்.பி., எம்.எல்.ஏ-க்கள்., மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்தக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

எடப்பாடி பழனிசாமி

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கூடப்போகும் இந்தக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாக தகவல் வந்துள்ளது. 

இந்தக் கூட்டத்தில், அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்துக்கான தேதி குறித்து முடிவு செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும், சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகிய இருவரையும் கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கவும் இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதேபோல், கட்சியில் நியமிக்கப்படவுள்ள வழிகாட்டுக் குழுவுக்கும் ஒப்புதல் பெறப்பட உள்ளது. புதுச்சேரி தனியார் ரிசார்ட்டில் இருக்கும் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மீது இந்தக் கூட்டத்தின்போது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுமா என்பது இதுவரை தெரியவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!