Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இலவச வைஃபை வசதியுடன் பயணிகளைக் கவரும் அரசுப் பேருந்து

இலவச இணைய வசதி சேவையுடன் ராமநாதபுரத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்து மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

அரசுப் பேருந்தில் ஏறும் பயணிகளை, ஏதோ இலவசமாக அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு அழைத்க்ச் செல்வதைப் போலத்தான் பெரும்பாலான நடத்துநர்கள் நடத்துவது வழக்கம். ஒருமையில் அழைப்பது, பயணிகள் மீது எரிந்து விழுவது என வயது முதிந்தவர்கள், நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள், பெண்கள் அனைவரிடமும் மரியாதை குறைவாக நடந்துகொள்ளும் நடத்துநர்களுக்கு மத்தியில், பயணிகளை கவர்வதற்காக தனது சொந்தப் பணத்தை செலவழித்து அரசுப் பேருந்தை ஆச்சர்யப் பேருந்தாக மாற்றியிருக்கிறார் நடத்துநர் ஜெயபாலாஜி.

இலவச இணைய வசதி செய்துள்ள நடத்துனர் ஜெய்பாலாஜி

ராமநாதபுரத்தில் இருந்து மதுரை வழியாக தஞ்சாவூருக்கு நாள்தோறும் பகல் 2.20 மணிக்கு அரசுப் பேருந்து ஒன்று இயக்கப்படுகிறது. இந்த பேருந்து மறுமார்க்கமாக தஞ்சாவூரில் இருந்து இரவு 1.30 மணிக்கு புறப்படுகிறது. இதன் நடத்துநராக திருச்சியைச் சேர்ந்த ஜெயபாலாஜி என்பவர் பணியாற்றுகிறார். தனியார் பேருந்துகளுக்கு இணையாக மட்டுமல்ல, அதற்கு ஒரு படி மேலாகவே தான் பணியாற்றும் பேருந்தை மாற்றி அசத்தியிருக்கிறார் நடத்துநர் ஜெயபாலாஜி. பயணிகளைக் கவர்ந்து இழுக்கும் வண்ண ஸ்டிக்கர்கள், குப்பை இல்லா சுத்தமான பேருந்தின் உட்பகுதி, பின்பகுதியில் அமர்ந்திருக்கும் பயணிகள் மீது வெயில் படாத வகையில் திரை சீலை அலங்காரம் என பேருந்தை அலங்கரித்துள்ளார். உலகின் பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே துறை நாட்டில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளுக்காக ’இலவச வைஃபை' வசதியை சமீபத்தில்தான் ஏற்படுத்தியது. அந்த திட்டத்தைப் போலவே, அரசுப் பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கும் ’இலவச வைஃபை’ வசதியை நடத்துநர் ஜெயபாலாஜி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். 

இலவச வைஃபை சேவை அமைக்கத் தோன்றியது குறித்து நம்மிடம் பேசிய ஜெயபாலாஜி, 'நான் பணிக்குச் சேர்ந்த நேரத்தில் அரசு பேருந்துகளை விட தனியார் பேருந்துகளில் பயணிக்கவே மக்கள் விரும்புவதை தெரிந்துகொண்டேன். இதற்குக் காரணம் தனியார் பேருந்துகள் சுத்தமாக இருப்பது, பயணிகளைக் கவரும் வகையில் வெளிப்புற அலங்காரம் என்பதை உணர்ந்தேன். நாம் பணியாற்றும் பேருந்தையும் ஏன் அவ்வாறு வைத்துக்கொள்ளக் கூடாது என கருதி அவற்றை எனது சொந்த செலவில் செயல்படுத்தினேன். இதற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் பேருந்தில் டி.வி. வைப்பது குறித்து யோசித்தேன். தற்போது பெரும்பாலானவர்கள் டி.வி பார்ப்பதைவிட ஸ்மார்ட்போன் வழியாக எல்லாவற்றையும் அறிந்துகொள்கிறார்கள். இதனால் டி.வி-க்கு பதிலாக இலவச வைஃபை வசதி ஏற்படுத்தினேன். எங்கள் கிளை மேலாளர் தேவேந்திரன் எனது முயற்சியைப் பாராட்டினார். இலவச இணைய சேவை வசதி எங்கள் பேருந்தில் இருப்பது குறித்து பயணிகளுக்கு அறிவிக்க பேருந்தின் கண்ணாடிகளில் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளேன். இதை அறிந்த பயணிகள் எங்கள் பேருந்து வரும் வரை காத்திருந்து அதில் பயணிக்க விரும்புகிறார்கள். குறிப்பாக அரசு ஊழியர்கள், மாணவர்கள் எங்கள் பேருந்துக்காக மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறார்கள். இதன்மூலம் கூடுதல் வருவாய் கலெக்‌ஷன் ஆகிறது. எனது மனதுக்கும் திருப்தியாக உள்ளது' என்றார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement