Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'சபாநாயகர் தனபாலை முதல்வர் ஆக்குங்கள்..!'- ஓங்கி ஒலிக்கும் வாஞ்சி இயக்கத்தின் குரல்!

சட்டமன்றம்

சபாநாயகர் தனபாலை முதல்வராக்க வேண்டும் என்று டி.டி.வி தினகரன் தரப்பில் இருந்து குரல் எழுந்துள்ள சூழலில் வாஞ்சி இயக்கத்தின் சார்பாக அதே கோரிக்கை முன்வைக்கப்பட்டு இருக்கிறது. 

வாஞ்சி இயக்கத்தின் நிறுவனத் தலைவராக இருப்பவர், ராமநாதன். வாஞ்சிநாதனுக்கு சிலை வைக்க வேண்டும், மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இந்த இயக்கத்தின் சார்பாக வலியுறுத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளார். தற்போது, தமிழக முதல்வராக சபாநாயகர் தனபாலை நியமிக்க தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி வருகிறார். 

சபாநாயகர் தன்பால்

இது தொடர்பாக வாஞ்சி இயக்கத்தின் தலைவரான ராமநாதனைச் சந்தித்துப் பேசினோம். ’’நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவன் அல்ல. வாஞ்சிநாதன் மீது கொண்ட பற்றின் காரணமாக அவர் பெயரில் இயக்கம் நடத்திவருகிறேன். இந்த இயக்கம் மூலமாக மாணவர்களுக்கு உதவுவது உள்ளிட்ட சமூகப் பணிகளைச் செய்து வருகிறோம். 

நாட்டின் மிக உயரிய பொறுப்பான குடியரசுத் தலைவராக இரண்டுமுறை கூட தாழ்த்தப்பட்ட சமூகத்தவரால் வர முடிந்திருக்கிறது. ஆனால், சமூக நீதி பற்றி உரத்துப் பேசக் கூடிய தமிழகத்தில் முற்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்டவர், மிகவும் பிற்படுத்தப்பட்டவரால் மட்டுமே முதல்வாக முடிகிறதே தவிர, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரால் சுதந்திரம் பெற்றதில் இருந்து இன்று வரையிலும் வர முடியவில்லை.

வாஞ்சி ராமநாதன்காமராஜர் காலத்தில், அவர் முதல்வர் பொறுப்பில் இருந்து விலகி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவரானபோது அவரது அமைச்சரவையில் இருந்த பக்தவச்சலம் முதல்வராக ஆக்கப்பட்டார். ஆனால், காமராஜரின் அமைச்சரவையில் இருந்த மிகவும் எளிமையானவரும் காந்தியவாதியுமான கக்கன் முதல்வராக யாருமே குரல் கொடுக்கவில்லை. இந்தச் சூழலில், ‘தமிழக முதல்வர் பதவியை சபாநாயகர் தனபாலுக்கு வழங்க வேண்டும்’ என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு இருப்பது வரவேற்புக்கு உரியது. இந்தக் கோரிக்கையை எவர் முன்வைத்தாலும் நான் ஆதரித்து இருப்பேன். இதன் பின்னால் இருக்கும் நியாயத்தின் பக்கம் நான் இருக்கிறேன். 

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராவதற்கு மிகவும் அரிதான வாய்ப்பு இப்போதுதான் கிடைத்து இருக்கிறது. இந்த வாய்ப்பை தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சியினரும், அணிகளுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டு தனபாலை முதல்வராக்க முன்வர வேண்டும். இதன் மூலமாக சமூக நீதிக்கு பிற மாநிலங்களுக்கு முன் உதாரணமாகத் திகழும் தமிழகம், எளிய சாமான்ய மக்களை உயர் பொறுப்பில் வைத்து அழகு பார்த்த விவகாரத்திலும் உதாரணமாக முடியும். அதனால்தான் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இந்தக் கோரிக்கையை முன்வைத்தேன்’’ என்றார், அக்கறையுடன்.   

ராமநாதன் தனது இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நோட்டீஸ் அச்சடித்து பொதுமக்களிடம் விநியோகம், செய்து வருகிறார். பொதுமக்களிடம் ஆதரவைத் திரட்டும் முயற்சியாக இந்தப் பணியில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார். அவரது இந்தக் கருத்துக்கு நெல்லை மாவட்டத்தில் மட்டும் அல்லாமல் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஆதரவு குவிந்து வருகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement