கோகுல இந்திரா நீக்கம்; நடிகர் செந்திலுக்கு புதிய பதவி! | Dinakaran removes Gokula indira from aiadmk Organization Secretary

வெளியிடப்பட்ட நேரம்: 15:46 (26/08/2017)

கடைசி தொடர்பு:16:29 (26/08/2017)

கோகுல இந்திரா நீக்கம்; நடிகர் செந்திலுக்கு புதிய பதவி!

அ.தி.மு.க அம்மா அணியின் அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து கோகுல இந்திரா நீக்கப்பட்டுள்ளார்.

கோகுல இந்திரா-செந்தில்


அ.தி.மு.க அம்மா அணி நிர்வாகிகளை தினகரன் அவ்வப்போது மாற்றி வருகிறார். இந்நிலையில், அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்த, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவை அந்தப் பொறுப்பில் இருந்து தினகரன் நீக்கியுள்ளார். அதேபோல, இளைஞர் பாசறை செயலாளர் குமார் எம்.பி மகளிர் அணி இணைச்செயலாளர் கீர்த்திகா, அம்மா பேரவை இணைச் செயலாளர் ராஜவர்மன், இளைஞர் பாசறை துணைத் தலைவர் கே.சி. விஜய், இலக்கிய அணி இணைச் செயலாளர் ராமலிங்கம் ஆகியோர் அந்தப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

தினகரன் அறிவிப்பு


குறிப்பாக, அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளராக நடிகர் செந்தில் நியமிக்கப்பட்டுள்ளார். அனைத்துல எம்.ஜி.ஆர் மன்றத்தின் இணைச் செயலாளராக கோனேஸ்வரன், புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர்களாக மணிகண்டராஜா, ஜெயராஜ், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர்களாக ராமலிங்கம் ஜோதி, சங்கர், முருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, மகளிர் அணி இணைச்செயலாளராக முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெயராஜ் மற்றும் இளைஞர் பாசறை செயலாளராக கே.சி. விஜய் நியமிக்கப்பட்டுள்ளனர்.