கும்ரீத்தை சிறை செல்ல வைக்கப் போராடிய சி.பி.ஐ. அதிகாரி!

ள் பலமும் பண பலமும் அதிகார பலமும் நிறைந்த சாமியார் கும்ரீத் சிங். கடந்த 2002-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி கும்ரீத் சிங் மீது சி.பி.ஐ பாலியல் வழக்குப் பதிவுசெய்தது.  ஹரியானாவில் உள்ள பஞ்ச்குலாவில் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. டெல்லி ஸ்பெஷல் க்ரைம் பிரிவில், டி.ஐ.ஜி யாக இருந்த முலின்ஜா நாராயணன் வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது. அதற்குப் பின், முலின்ஜா நாராயணணைச் சந்தித்த சி.பி.ஐ உயர் அதிகாரி ஒருவர், 'இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இருக்கக் கூடாது. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படக் கூடாது' என முலின்ஜா நாராயணனை எச்சரித்தார். ஆனால், நேர்மையான அதிகாரியான முலின்ஜா, எந்த மிரட்டலுக்கும் பயப்படவில்லை. அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என பலரும் முலின்ஜா நாராயணனை சந்தித்து கடும் நெருக்கடி கொடுத்தனர். 

சி.பி.ஐ அதிகாரி முலின்ஜா நாராயணன்

இந்த வழக்கு நடத்திய விதம் கொடுத்து முலின்ஜா நாராயணன் கூறுகையில், '' அறிவுக்கும் அதிகாரப் பலத்துக்குமிடையேயான விளையாட்டு இது. சில சமயங்களில் நாங்கள் தோற்போம். சில சமயங்களில் வெற்றி பெறுவோம். 1999-ம் ஆண்டு, கும்ரீத்தால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் ஒருவர், பின்னர் திருமணம் செய்துகொண்டு கணவருடன் வாழ்ந்தார். அவரை இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக வைத்திருந்தேன். அந்த பெண்ணிடம் வாக்குமூலம் வாங்க நான் படாத பாடுபட்டேன். அந்தப் பெண்ணை ரகசியமாக நீதிபதியின் முன் வாக்குமூலம் தர வைத்தேன்.  கும்ரீத்துக்கு எதிராக சாட்சி சொல்ல பயந்தனர். நீதித்துறை மீது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. சீனியர்கள் மட்டுமல்ல எனது சக அதிகாரிகளுக்குக் கூட சாமியாருக்கு எதிரான இந்த வழக்கில் நான் தீவிரம் காட்டுவது பிடிக்கவில்லை. இப்போது நீதி வென்றிருக்கிறது '' என்றார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு, கந்தகார் விமானக் கடத்தல், பாபர் மசூதி இடிப்புப் போன்ற வழக்குகளில் பணியாற்றியிருக்கிறார். 2009-ம் ஆண்டு சி.பி.ஐ-யில் இருந்து டி.ஐ.ஜி.யாக  ஓய்வுபெற்றார் முலின்ஜா நாராயணன். சி.பி.ஐ-யில் சாதாரண எஸ்.ஐ-யாக பணியில் சேர்ந்து  டி.ஐ.ஜி வரை பதவி உயர்வு பெற்ற ஒரே அதிகாரி இவர்தான். 38 வருஷம் சி.பி.ஐ.யில் பணி புரிந்திருக்கிறார். சிறந்த சேவையாற்றியதற்காக குடியரசுத் தலைவர் விருதும் பெற்றுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!