வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (26/08/2017)

கடைசி தொடர்பு:14:53 (09/07/2018)

'160 விவசாய ஆர்வலர் குழு மற்றும் 32 விவசாய உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்படும்' - கரூர் கலெக்டர் அறிவிப்பு!.

 

 கோவிந்தராஜன்

"கரூர் மாவட்டத்தில் கூட்டுப்பண்ணை திட்டத்தை வட்டார வாரியாக செயல்படுத்த வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் 160 விவசாய ஆர்வலர் குழு மற்றும் 32 விவசாய உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட உள்ளது" என்று கரூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.


இது சம்பந்தமாக, அவர் மேலும் தெரிவித்ததாவது, "கரூர் மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 652.20 மி.மீட்டர் ஆகும். ஆகஸ்ட் மாதம் வரை கிடைக்க வேண்டிய சராசரி மழையளவு 248.70 மி.மீ. இதுவரை 299.75 மி.மீ மழை கிடைக்கப் பெற்றுள்ளது. 2016-17 ல் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் சம்பா நெல் பயிரில் 3527 விவசாயிகளுக்கு ரூ 5.23 கோடிக்கு ஒப்பளிக்கப்பட்டு, இதுவரை 2582 விவசாயிகளுக்கு 3.54 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத்திட்டத்தில் காரீப் பருவத்தில் வேளாண் பயிர்கள் உளுந்து, துவரை மற்றும் நிலக்கடலை பயிர்களில் கடன் பெறா விவசாயிகள் இனத்தில் 656 விவசாயிகள் 554 ஹெக்டேர் பரப்பில் காப்பீடு செய்துள்ளனர்.

தோட்டக்கலை பயிர்கள் வெங்காயம், மஞ்சள், வாழை மற்றும் மரவள்ளி பயிர்களில் கடன்பெறும் விவசாயிகள் இனத்தில் 1060 விவசாயிகள் 183.5 ஹெக்டேர் பரப்பில் காப்பீடு செய்துள்ளனர். நடப்பு நிதியாண்டில் சிறு/குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து விவசாயிகள் உற்பத்திக் குழுக்கள் தொடங்கி கூட்டுப்பண்ணையம் திட்டத்தினை வட்டார வாரியாக செயல்படுத்தி வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் 160 விவசாய ஆர்வலர் குழு மற்றும் 32 விவசாய உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் குழுக்கள் கூட்டுறவு சங்கமாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. அனைத்து வட்டாரங்களிலும் ஏ.டி.டீ 49,கோ 50,கோ 51 மற்றும் பீ.பி.டி 5204 சான்று பெற்ற நெல்விதைகள் மொத்தம் 130.46 மெட்ரிக் டன் மற்றும் சிறுதானியங்கள் 0.350 மெ.டன், உளுந்து விபிஎன் 5, விபிஎன் 6,துவரை கோ(ஆர்,ஜி)7, பாசிப்பயிறு கோ 8 மொத்தம் 19.44 மெ.டன் பயிறு வகை விதைகள் மற்றும் நிலக்கடலை விதை ரகம் கே 6 15.99 மெ.டன் இருப்பு வைக்கப்பட்டு, மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

நுண்ணீர் பாசன இயக்கத் திட்டத்தின் கீழ் வேளாண்மைத்துறை நடப்பாண்டு பொருள் இலக்கு 840 ஹெக்டேர் மற்றும் நிதி ஒதுக்கீடு ரூ 286.14 லட்சம் பெறப்பட்டுள்ளது. அதேபோல், இம்மாவட்டத்தில் அனைத்து தனியார் உரக்கடைகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் யூரியா 774 மெ.டன், டிஏபி 382 மெ.டன், பொட்டாஷ் 643 மெ.டன், கலப்பு உரம் 1218 மெ.டன் இருப்பில் உள்ளது. விவசாயிகள் இவை அனைத்தையும், பயன்படுத்தி வேளாண்மையை செழிக்க வைக்க கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.