மாந்திரீகத்தின் வலையில் கொம்பன் ஆந்தைகள் !

மதுரை மேலூரை அடுத்த அரிட்டாபட்டி ஏழு மலைகளால் சூழ்ந்திருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் இக்கிராமத்தில் நூற்றுக்கணக்கான பறவை இனங்கள் இருக்கின்றன. ஆசியாவில் அரிதாக காணப்படும் லகுடு என்று அழைக்கப்படும் லகார் ஃபால்கன், சகின் ஃபால்கன் உள்ளிட்ட பல்வேறு ரேப்டார்ஸ் ஏழுமலைகளின் இயற்கை அமைப்பில் வாழ்ந்துவருகின்றன . இந்நிலையில் கொம்பன் ஆந்தை என்று சொல்லக்கூடிய கூகை கத்திப் பறவைகளை மாந்திரீகத்துக்காக சிலர் இரவு நேரங்களில் பிடித்துச் செல்வதாக அரிட்டாபட்டியைச் சேர்ந்த பறவைகள் ஆர்வலர் ரவி குற்றம் சாட்டுகிறார். பல மாதங்களாக இந்தப் பறவைகள் வேட்டையாடப்படுதால், பறவகைகள் இனம் அழிந்துவருவதாக தெரிவித்தார்.

ஆந்தை

மேலும் அவர் கூறுகையில், அரிட்டாபட்டியில் பழமையான மரங்களும் அரிய வகை பறவைகள் வாழும் சுற்றுச்சூழல் அமைப்பு உள்ளது. கிரானைட் குவாரிகள் கூட இந்த மலைகளை குறிவைத்தனர். எங்கள் கிராம மக்கள் ஒன்றினைந்து போராடியதால் அதைக் கைவிட்டனர் தற்போது இங்கு வாழும் பறவைகளை அழிக்க சிலர் இரவு நேரங்களில் வந்து பறவைகளைப் பிடித்துச் செல்கின்றனர். இவ்வாறன செயல் பல நாள்களாக தொடர்கிறது. ஆனால், அரசு இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய செயலாக உள்ளது . மாந்திரீகத்துக்கு கூகை கத்திகளைப் பிடிக்கவரும் நபர்களைக் கைதுசெய்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

படம் ; உதயகுமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!