Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னை வந்தார் ஆளுநர்... சந்திப்புக்காக தி.மு.க நேரம் கேட்பு!

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்தடைந்தார்.

வித்யாசாகர் ராவ்

எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் இணைந்தப் பிறகு அ.தி.மு.க-வில் மீண்டும் மோதல் வலுவடைந்துள்ளது. குறிப்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் போர்கொடி தூக்கியுள்ளனர். தற்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் புதுச்சேரியில் உள்ள ரிசார்ட்டில் தங்கியுள்ளனர். இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து சென்னை வந்துள்ளார்.

ஏற்கெனவே, முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதவை தினகரன் அணியினர் வாபஸ் பெற்றுள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பாக ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என்றும் தினகரன் அணியினர் எதிர்பார்க்கின்றனர். மேலும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரைச் சந்திக்க மீண்டும் நேரம் கேட்டுள்ளனர். நாளை அல்லது நாளை மறுநாள் (திங்கள்கிழமை) அவர்கள் ஆளுநரைச் சந்திப்பார்கள் என்று கூறப்படுகிறது.

அதேபோல, தி.மு.க சார்பிலும் ஆளுநரைச் சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது. சட்டசபையைக் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தி.மு.க தரப்பு சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement