வெளியிடப்பட்ட நேரம்: 21:25 (26/08/2017)

கடைசி தொடர்பு:21:25 (26/08/2017)

'சசிகலாவை நீக்கினால் அடிதடிதான் நடக்கும்' - எச்சரிக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கினால் அடிதடிதான் நடக்கும் என்று டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி எச்சரித்துள்ளார். 

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்


அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்குப் பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரிடம் தனித்தனியாகக் கடிதம் கொடுத்தனர். அவர்கள் அனைவரும் புதுச்சேரியில் உள்ள தனியார் சொகுசுவிடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி, ’ பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்குவதாக தீர்மானம் கொண்டுவரப்பட்டால், அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் அன்றே சலசலப்பு ஏற்பட்டு, அடிதடி உண்டாகும். அந்த கருத்தை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. சசிகலாவை பதவிநீக்கம் செய்யும் கருத்தை யாரும் முன்மொழியவே முடியாது. அவ்வாறு தீர்மானம் கொண்டுவரும் பட்சத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினரிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அடிதடி ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.