Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரேசன் கடைக்கு மட்டுமல்ல, அரசு பஸ்ஸூக்கும் ஆப்பு: கொதிக்கும் டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர்கள்!

தமிழ்நாடு ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம், சேலம் சீலநாயக்கன்பட்டி கிரீன் ரிட்ஜ் ஹோட்டலில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மாநில ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்களின் கூட்டமைப்பின்  தலைவர் முரளிதரன், செயலாளர் வைகை குமார், பொருளாளர் ராம்குமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி உரிமையாளர்களும் என 400-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டார்கள்.


இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர்  தனபால், ''சமீபத்தில் இந்திய அரசால் கொண்டுவரப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தால் பல சிக்கல்கள் உருவாக்கி இருக்கிறது. இச்சட்டத்தின் படி பொதுமக்கள் இனி மண்டல போக்குவரத்து அதிகாரி (ஆர்.டி.ஓ.,)விடம் ஓட்டுநர் உரிமம் (டிரைவிங் லைசென்ஸ்) பெற முடியாது. மாறாக கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஓட்டுநர் உரிமத்தை பெற முடியும்.
அதே போல டிரைவிங் ஸ்கூல்கள் இருக்காது. கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே டிரைவிங் ஸ்கூல்கள் நடத்தும். தமிழ்நாட்டில் 2000-க்கும் மேற்பட்ட டிரைவிங் ஸ்கூல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு  1000 சதுர அடி நிலம்  இருந்தால் அனுமதி கொடுக்கிறார்கள். நாங்கள் ஒரு மாணவனிடம் நான்கு சக்கர பயிற்சி மற்றும் உரிமம் வாங்கி கொடுக்க 5000 வாங்குகிறோம். இதனால் சிறு தொழில் முனைவோர் இத்தொழிலில் ஈடுபடுகிறார்கள்.


ஆனால், புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி  ஓட்டுநர் பயிற்சி பள்ளி 10 ஏக்கரில் அமைக்க வேண்டும். அதனால் சாதாரண மக்களால் இந்த ஓட்டுநர் பயிற்சி பள்ளி வைத்திருக்க முடியாது. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே வைத்திருக்க முடியும்.
அதே போல அரசு பஸ்ஸூகள் ரத்து செய்யப்பட்டு தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள்  பேருந்துகளை இயக்கும். இச்சட்டத்தின் படி பேருந்துகள் மட்டுமல்ல, ஆட்டோக்கள், ஆம்னி பேருந்துகள் என அனைத்து வாகனங்களையும் கார்பரேட் நிறுவனங்கள் மட்டுமே வைத்திருக்கும்படி இச்சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள்.


இந்த வாகனங்கள் பழுதடைந்தால் கூட அந்த நிறுவனத்தில் மட்டுமே பழுது பார்க்க வேண்டும். வேறு மெக்கானிக்கல் கடைகளில் பழுது பார்க்கக் கூடாது. இநக்ச் சட்டத்தால் ஆட்டோ உரிமையாளர்கள், ஆம்னி பஸ் உரிமையாளர்கள், மெக்கானிக்கல் கடை ஊழியர்கள்  என வாகனத்தை நம்பி வாழக்கூடிய சிறிய தொழிலாளர்கள்  அனைவரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் ஓட்டுநர்கள் வாகனத்தை ஓட்டிச் செல்லும் போது அசல் உரிமத்தை வைத்திருக்க வேண்டும். நகல் உரிமங்கள் செல்லாது என்கிறார்கள். ஆனால் அசல் உரிமம் தொலைந்து விட்டால் மீண்டும் பெறுவது என்பது பல நடைமுறை சிக்கல்கள் இருக்கிறது. அதனால் நாம்  அனைவரும் சேர்ந்து போராடினால் மட்டுமே இந்த சட்டத்தில் மீண்டும் திருத்தம் கொண்டு வர முடியும்'' என்றார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement