Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'தினகரன் பிளாக்மெயில் செய்கிறார்' - திருச்சி எம்.பி குமார் குற்றச்சாட்டு

அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், கட்சியின் முன்னணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களை கட்சியில் இருந்து நீக்கி அறிவித்து வருகின்றார். இன்று திருச்சி எம்.பி ப.குமார், வசமிருந்த மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதாகத் தினகரன் அறிவித்தார்.

எம்.பி. குமார்

இந்நிலையில் திருச்சியில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த எம்.பி ப.குமார்,

“மாண்புமிகு அம்மா அவர்களால் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு, இரண்டாவது முறையாக மக்கள் பணி செய்து வருகின்றேன். திருச்சியைப் பொறுத்த வரை விமான நிலைய விரிவாக்கம், பேருந்துநிலையம் போன்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்த உள்ளேன்.

எனக்குப் பொறுப்பு வழங்கியதும், தேர்தலில் நிற்க வைத்து, வெற்றி பெற வைத்ததும் அவர்தான். அப்படிப்பட்ட என்னை நீக்கி டி.டி.வி.தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பைக் கேட்ட பொழுது சிரிப்புதான் வந்தது. மதிப்பு இழக்கப்பட்ட 1000 மற்றும் 500நோட்டுகளாகவும் செல்லாக்காசாக இருந்து கொண்டு, தங்கக் காயின்களை நீக்குவதைக் கண்டால் அவர்களுக்குப் பைத்தியம் முற்றுவதைக் காண முடிகிறது.  அவர்களுக்கு எலுமிச்சைப் பழத்தைத் தொண்டர்கள் அனுப்ப வேண்டும்.

அம்மா உயிரோடு இருந்தபோது 33வருடங்கள் அவரின் நிழலில் இருந்துகொண்டு சசிகலாவும், அவரது குடும்பத்தினரும்,அம்மாவின் பதவியை பயன்படுத்தி சுகத்தில் இருந்தார்கள். அந்தப் பதவி சுகத்தில் இருந்து அவர்களால் இப்போது மீள முடியவில்லை. இப்போது பதவி இல்லை என்றதும், தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி சிறப்பான பணியைப் பார்த்துப் பொறுத்துக்கொள்ள முடியாத இந்த மன்னார்குடி கும்பல், பிளாக் மெயில் செய்து எடப்பாடி பழனிசாமியை தன் வசப்படுத்த நினைக்கிறார்கள்

தினகரன் அடுத்தடுத்த அறிவிப்பை வெளியிட்டு கட்சிக்குள் குழப்பத்தை உண்டாக்க நினைக்கிறார். பாத்ரூம் போய்விட்டு திரும்பி வரும்போது ஏதாவது அறிவிப்பு வருமோ என்கிற நிலை உள்ளது. அந்தளவுக்கு கட்சிக்குள்ளும் மக்களுக்குள்ளும் குழப்பத்தை உண்டாக்கி வருகிறார். இந்தக் கும்பல் கட்சியை விட்டு ஒதுங்கிக்கொள்ள வேண்டும்.

தினகரன் உருவ பொம்மை எரிப்பு

சசிகலாவும், தினகரனையும் மக்கள் ஒரு போதும் ஏற்றதில்லை. ஆர்.கே நகரில் வேட்பாளராக போட்டியிட்ட தினகரன், சசிகலாவின் படத்தை ஏன் போடவில்லை.? பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், போட்டால் ஆர்கே நகரில் தோற்று விடுவார் என்றுதான். இப்படி டி.டி.வி.தினகரன் சுயநலமாக இருக்கும்போது கட்சியை காக்க வேண்டும் என்கிற சுயநலம் என்னைப் போன்ற தொண்டர்களுக்கு உள்ளது.

தினகரன் மீதான வழக்கு நீதிமன்றத்தில் தற்போது நடந்துகொண்டு இருக்கிறது. வழக்கை விரைவாக நடத்தி தண்டனை வழங்கப்பட்டால், தினகரன் உண்டாக்கும் குழப்பத்திலிருந்து தமிழகம் தப்பிக்கும். நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்

அம்மாவின் பெயரைப் பயன்படுத்தி உண்டாக்கிய களங்கத்தினால், சசிகலாவுக்கும் அவரது குடும்பத்துக்கும் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை கிடைத்தது. அப்படி விதிக்கப்பட்ட தண்டனையை சசிகலா எப்படி அனுபவிக்கிறார் என தற்போது  பல வீடியோக்கள் வெளியாகி வருவது காட்டுகிறது. அவ்வளவு சொகுசு இவர்களுக்குக் கேட்கிறது. அதிகாரம் எப்போதெல்லாம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் துஷ்பிரயோகம் செய்பவர்கள்  இவர்கள். பணம் இருக்கிறது என்பதற்காக எதையும் செய்வார்கள்.

ஜெயலலிதா உயிரோடு இருக்கும்வரை சுப்பிரமணியசுவாமி குறை கூறுவார். ஆனால் அப்படிப்பட்ட சுப்பிரமணியசுவாமி, அம்மாவின் மறைவுக்குப் பிறகு சசிகலா நல்லவர் என்கிறார். சுப்பிரமணிய சுவாமி எப்படிப்பட்டவர் என்பது ஊருக்கே வெளிச்சம். அப்படிப்பட்ட ஒரு நல்லவர், சசிகலா நல்லவர் சான்றிதழ் கொடுக்கிறார்.

சசிகலாவும், தினகரனும் தன்னை வளப்படுத்திக் கொண்டவர்கள். எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி செய்கிறார். தற்போது ஓ.பன்னீர் செல்வமும் இணைந்துவிட்டார். இந்நிலையில்தான் 21 எம்எல்ஏக்களை அடைத்து வைத்து டி.டி.வி.தினகரன் பிளாக் மெயில் செய்து, கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்.

 

எல்லோரையும் நீக்கும் டி.டி.வி தினகரன், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் மாவட்டச் செயலாளராக உள்ளார் அவரை நீக்கத் தைரியம் உண்டா...? இல்லை. இன்று அவர் காமெடி நடிகர் செந்தில் அமைப்புச் செயலாளராக அறிவித்துள்ளார் என்பதைப் பார்த்தால் கட்சியை எவ்வளவு காமெடியாக உள்ளது. அதைவிடக் கடந்த 2009 தேர்தலில் என்னை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்த சாருபாலா தொண்டைமான், என் வெற்றி செல்லாது என கூக்குரல் இட்டார் அவரை இன்று டி.டி.வி. தினகரன் அமைப்புச் செயலாளராக அறிவித்துள்ளார்.

 

தற்போது தமிழக முதல்வர் அம்மா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைத்திருக்கிறார்கள். அப்போது அம்மாவின் மரணம் பற்றிய உண்மை தெரியவரும். மேலும் 28-ம்தேதி தலைமைக் கழகத்தில் கழக முன்னோடிகள் கூட்டம் நடத்தி முடிவெடுப்பார்கள். 21 எம்எல்ஏக்களை தன் சுயலாபத்துக்காகக் கூட்டுகிறார். இப்படிப்பட்ட இவர், பைத்தியம் தெளியாமல் கட்சியை இயக்கிக் கொண்டிருக்கிறார். தமிழகத்தையும், கட்சியையும் தவறாக வழிநடத்துகிறார். செல்லாக்காசான இவர்கள், எங்களை நீக்கத் தகுதியில்லை. மன்னார்குடி மாபியா ஒழிக. பைத்தியம் பிடித்த டி.டி.வி தினகரன் ஒழிக. துரோகி தினகரன் ஒழிக" என்றார்.

 

இந்நிலையில் ப.குமாரின் ஆதரவாளர்கள் திருச்சி ரயில்வே ஜங்க்சன் அருகே, டி.டி.வி.தினகரனின் உருவ பொம்மை எரித்தனர். இந்தப் பரபரப்பு அடங்குவதற்கு, டி.டி.வி தினகரனின் ஆதரவாளரான ஒத்தக்கடை செந்தில் என்பவர் எம்.பி குமாரின் உருவ பொம்மையை பேர்ட்ஸ் சாலையில் எரிக்க முயற்சி செய்ய, அவரை போலீஸார் கொத்தாக அமுக்கியது.

அ.தி.மு.கவின் அடுத்தடுத்த பதவி பறிப்பு, உருவ பொம்மை எரிப்பு போன்றவற்றால் திருச்சியில் பெரும்பரபரப்பு உண்டானது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement