Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'மைனாரிட்டி அரசு நீடிக்கக் கூடாது' - துரைமுருகன் பேட்டி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் தெரிவித்தார். 

துரைமுருகன் தலைமையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது சட்டப்பேரவையை உடனடியாகக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக துரைமுருகன் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ’அ.தி.மு.கவிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் பிரிந்தபோது, அவருக்கு 9 எம்.எல்.ஏக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர். அன்றைய சூழலில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தவிட்டார். ஆனால், இன்றைய சூழலில் முதலமைச்சர் மீது நம்பிக்கையை இழந்துவிட்டதாக அ.தி.மு.கவைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் தனித்தனியாக கடிதம் கொடுத்தனர்.

ஓ.பன்னீர்செல்வம் விலகியபோது ஏற்பட்ட அதேசூழல் இன்றும் ஏற்பட்டுள்ளது. அதனைச் சுட்டிக்காட்டி பேரவையை உடனடியாகக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு தற்போது 113 எம்.எல்.ஏக்கள் ஆதரவு மட்டுமே உள்ளது என்பதையும் ஆளுநரிடம் கூறினோம். தமிழகத்தின் அரசியல் சூழலை நன்கு கவனித்து வருவதாகவும், அரசியல்ரீதியாக உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் ஆளுநர் உத்தரவாதம் அளித்தார்’ என்று அவர் கூறினார். ஆளுநருடனான சந்திப்பின்போது தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, காங்கிரஸ் கொறடா விஜயதாரணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.  
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement