’கிளைமேக்ஸ் பேரவையில்தான்’ - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி

தமிழக அரசியலில் இப்போது திரைப்படம்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. கிளைமேக்ஸ் என்பது சட்டப்பேரவையில்தான் நடக்கும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். 

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்


தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா, அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக நாகப்பட்டினத்தில் செப்டம்பர் 20-ம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கான பந்தல்கால் நடும்விழா இன்று நடந்தது. விழாவில் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், காமராஜ், துரைக்கண்ணு, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  மேலும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மாரத்தான் போட்டியையும் அவர்கள் தொடங்கி வைத்தனர். 


அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தமிழக அரசியலில் இப்போது படம்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. கிளைமேக்ஸ் என்பது சட்டப்பேரவையில்தான் நடக்கும். அ.தி.மு.கவின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருக்கும் அவரவர் கருத்துகளை வெளிப்படுத்த உரிமை உள்ளது. ஆனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூறுவதே அ.தி.மு.கவின் அதிகாரப்பூர்வ கருத்தாகும். பிறரது கருத்துகளை யாரும் நம்ப வேண்டும் என்று அவர் கூறினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!