ஆனைமுகனுக்கு ஞான தீபம் ஏற்றும் விழா!

 

சக்திவிகடன்- தீபம் விளக்கேற்றும் எண்ணை இணைந்து நடத்திய  ஆனைமுகனுக்கு ஞான தீபம் ஏற்றும் விழா இன்று காலை மதுரை எஸ்.பி.ஜே. மெட்ரிக் பள்ளியில் நடந்தது. இதில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு ஓவியம் உட்பட பல போட்டிகள் நடைபெற்றது. பெற்றோர்களுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் கலந்துகொண்டார்.

 

"போரிடும் ஆயுதத்தையே காவியம் எழுதும் எழுத்தாணியாக பயன்படுத்தியவர் விநாயகர், கல்விக்கடவுள் மட்டுமல்ல, அவர் கணினிக்கடவுளும் ஆவார். அவரைப்பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். விளக்கேற்றும் பண்பாடு பற்றியும் அதன் காரணத்தையும் அறிந்து கொள்ள வேண்டும், மற்ற மொழிகளை கற்றிருந்தாலும், அதெல்லாம் வீட்டிற்கு ஜன்னல் போல, தாய்மொழியான தமிழ்தான் தலைவாசலாகும், அதனால், தமிழை நன்கு கற்றுக்கொள்ள வேண்டும். பிள்ளைகள் கேட்கும் கேள்விகளுக்கு பெற்றோர்கள் கோபப்படாமல் பதில் சொல்ல வேண்டும், அப்போதுதான் அவர்களுக்கு நம் பண்பாடு தெரியும் " என்று பல சுவராசியமான கதைகளை பேசி மாணவர்களையும், பெற்றோரையும் சிரிக்கவும்  சிந்திக்கவும் வைத்தார். மிகவும் சிறப்பாக நடந்தது இந்நிகழ்ச்சி.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!