Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’பன்னீர்செல்வம் இப்படிதான் பழனிசாமியுடன் இணைந்தார்!’ - கொந்தளிக்கும் தினகரன் தரப்பு

கட்சியை விட்டு எம்.எல்.ஏ-கள், அமைச்சர்களை நீக்கிய தினகரன் இறுதியாக சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவி வகித்து வந்த எடப்பாடி பழனிசாமியை நீக்கி விட்டு புதியதாக சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக எஸ்.கே.செல்வத்தை நியமித்திருக்கிறார். இந்நிலையில் எஸ்.கே. செல்வம் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

பேட்டியில் எஸ்.கே.செல்வம், ''என்னை சேலம் புறநகர் மாவட்ட செயலாளராகவும், எஸ்.சி., வெங்கடாசலத்தை மாநகர் மாவட்ட செயலாளராகவும் நியமித்த தினகரனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளுகிறேன். அம்மாவின் மறைவுக்கு பின்னால் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு அம்மாவின் ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதால் சசிகலாவின் தலைமையில் ஒன்றிணைந்தோம். சசிகலா எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினார். அது பிடிக்காத காரணத்தால் நாங்கள் ஓ.பி.எஸ்., அணியில் வெளியே வந்தோம்.

கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவிற்கும், துணைப் பொதுச்செயலாளர் தினகரனுக்கும் பெரிய துரோகம் செய்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இவர் தற்போது மட்டுமல்ல ஆரம்ப காலத்தில் இருந்தே தன்னை கட்சியில் சேர்த்துவிட்ட செங்கோட்டையன், முத்துசாமியை துரோகத்தால் வீழ்த்தி இந்த நிலைக்கு வந்திருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமியின் போக்கு பிடிக்காததால் ஓ.பன்னீர்செல்வம்., கூட இணைந்தோம். ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமியை ஊழல்வாதி, அம்மாவிற்கு துரோகம் செய்தவர் என்றெல்லாம் பேசினார். ஓ.பி.எஸ்., நடத்திய ஒவ்வொரு கூட்டத்திலும் சேலத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.,களும், கட்சி நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமி கூட இணையக்கூடாது என்றே கூறி வந்தோம்.


ஆனால் ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டு மாபெரும் கபட நாடகத்தை நடத்தி கையூட்டு பெற்றுக் கொண்டு ஊழல்வாதி எடப்பாடி பழனிசாமியோடு இணைந்து விட்டார். உண்மையில் கட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தினகரன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

மதிப்பிற்குரிய மேட்டூர் எம்.எல்.ஏ., செம்மலை எடப்பாடி பழனிசாமியை ஊழல்வாதி என்று கூறி வெளியில் வந்தார். தற்போதும் அதே மனநிலையில் தான் இருப்பார் என்று கருதுகிறேன். நிச்சயம் செம்மலையும் தினகரன் கூட இணைவார். செம்மலை மட்டுமல்ல சேலத்தில் உள்ள எல்லா எம்.எல்.ஏ.,க்களும் தினகரன் கூட இணைவார்கள்.

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமிக்கு பகிரங்கமான ஒரு சவால் விடுகிறேன். தற்போது வகித்து வரும் முதல்வர் பதவியில் இருந்து விலகி விட்டு மீண்டும் அவரால் முதல்வர் ஆக முடியுமா? முதல்வரும், அமைச்சர்களும் இன்னும் எத்தனை நாள் பதவியில் இருப்போமோ அத்தனை நாள்களில் ஊழல் செய்து பணத்தை கொள்ளையடிக்கலாம் என்ற நோக்கத்தில் செயல்படுகிறார்கள்.

இதை நாங்கள் சும்மா விட மாட்டோம். இவர்களின் ஊழல்களை பொதுமக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவோம். தற்போது தான் உண்மையான தர்மயுத்தம் ஆரம்பித்து இருக்கிறது'' என்றார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement