Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழகத்தை ஒரு ஜோக்கர் ஆள்கிறார் - திருச்சியில் போட்டுத்தாக்கிய தினகரன் அணி!

தினகரனால் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர்கள், நேற்று அடுத்தடுத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து, சசிகலா மற்றும் தினகரனுக்கு எதிரான பேட்டியளித்தார்கள். அதில் ஒருபடி மேலேப்போன திருச்சி எம்.பி. ப.குமார், டி.டி.வி.தினகரன் பிளாக்மெயில் பார்ட்டி என விளாசினார். இதில் கடுப்பான தினகரன் ஆதரவாளர்களான முன்னாள் அரசு தலைமை கொறடா, மனோகரன், கர்நாடக மாநில அ.தி.மு.க செயலாளர் புகழேந்தி, முன்னாள் எம்.எல்.ஏ ராஜசேகரன் ஆகியோர் இன்று திருச்சியில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர்.

தினகரன் கோஷ்டிஅப்போது அவர்,

திருச்சி எம்.பி குமார், தினகரன் ஆதரவாளர்களை, “செல்லாக்காசு” என ஆவேசமாகப் பேசியதாக நாளேடுகளில் பார்த்தோம். பல ஆண்டுகளாக நாங்கள் இயக்கத்துக்காகப் பணியாற்றி உள்ளோம். கருணாநிதி பெங்களூரு வந்தபோது அடி வாங்கி இருக்கிறோம். இந்த எம்.பி.குமார் எப்படி வேட்பாளர் ஆனார் என்பது ஊரறிந்த விசயம்.

சசிகலாவின் அண்ணி இளவரசியின் சம்மந்தி இன்ஜினியர் கலியபெருமாள் வீட்டுக்கு பி.ஏ.வாக வந்த குமாருக்கும் அ.தி.மு.க-வுக்கும் என்ன சம்பந்தம்?. பதில் சொல்ல முடியுமா? அதேபோல், அருண்மொழித்தேவன், வைத்திலிங்கம் எல்லாம் இப்போது தினகரனுக்கு எதிராக பேசுகிறார்கள். அருண்மொழிதேவன், வெங்கடேஷ் வீட்டில்தான் கண் முழிப்பார். முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தால் சொந்த தொகுதியில் ஜெயிக்க முடியவில்லை இவர்கள் பேசுகிறார்கள்.

எம்.பி.குமார் வெற்றி பெற உழைத்தது இந்த மனோகரன்தான் என அவரே கூறினார். அப்படிப்பட்ட எங்களைச் செல்லாக்காசு எனக் கூறியது கண்டிக்கத்தக்கது. எம்.பி.குமார் முடிந்தால் சாருபாலாவோடு போட்டியிட்டு டெபாசிட்டை காப்பாற்றிக் கொள்ளட்டும். தொண்டர்கள்தான்  அ.தி.மு.கவின் தூண். அவர்கள்தான் தினகரனை கட்சித் தலைவராக்க விரும்புகிறார்கள்.

தினகரனால் மட்டும்தான் கட்சியைக் காப்பாற்ற முடியும். பொதுக்குழுவை பொதுச்செயலாளர்தான் கூட்ட முடியும். டி.டி.வி தினகரனின் காலில் அதிகப்படியாக விழுந்தவர் ஓ.பி.எஸ்தான்.

குமார் சவால் விட்டார், இன்று காலை டி.டி.வி தினகரனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். விரைவில் முதல்வர் பதவியிலிருந்து தூக்கி எறியப்படுவார். ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆட்சியைக் காப்பாற்ற உடனே பதவி விலக வேண்டும்.

அ.தி.மு.கவுக்கு எதிராகச் சின்னத்தை முடக்கினார்கள். கட்சியை டெல்லியில் அடமானம் வைத்து விற்றுவிட்டார்கள். கட்சிக்கே தொடர்பில்லாத நபர்கள் டெல்லியிலிருந்து கட்சியை இயக்க முயற்சிக்கிறார்கள். இந்த ஓ.பி.எஸ்தான் அ.தி.மு.க மூன்றாகப் பிரிந்ததற்கு காரணம். துரோகிகளுக்கு வெண் சாமரம் வீசி அழகு பார்த்தீர்கள்.

ஓமந்தூரார், அண்ணா,கலைஞர், எம்.ஜி.ஆர், அம்மா ஆகியோரால் திராவிட இயக்கம் வளர்க்கப்பட்டது. அதனை யாராலும் அழிக்க முடியாது. அம்மாவுக்கு இணையாக சேலத்தில் கட்- அவுட் வைக்கிற அளவுக்கு எடப்பாடி அலப்பறை செய்வதா.?

இப்போது தமிழகத்தை ஒரு ஜோக்கர் ஆண்டு கொண்டு இருக்கிறார், மெஜாரிட்டியை இழந்த அரசு ஆட்டம் கண்டுவிட்டது, ஆட்சியை காப்பாற்ற எடப்பாடி பழனிசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் தினகரனுக்கு மக்கள் அமோக வரவேற்பை அளித்தார்கள். தமிழக மக்களுக்கு ஒரே நாதி தினகரன்தான். அவர் கடவுள் ஒருவருக்கு மட்டுமே பயப்படுவேன் எனக்கூறி உள்ளார் அதனை ஆதரிக்கிறேன்.

தற்போது எங்கள் அணியைச் சேர்ந்த எங்கள் எம்.எல்.ஏக்கள் ஆட்சிக்கு எதிராக கவர்னரிடம் மனுகொடுத்துவிட்டார்கள். தற்போது கொறடா சபாநாயகரிடம் மனு அளித்திருக்கிறார். இன்னும் ஏன் கீழே இறங்க மறுக்கிறீர்கள். பொதுப்பணித்துறை, காவல், உள்துறை உள்ளிட்ட துறைகளை மற்றவர்களுக்குத் தர மறுக்கும் எடப்பாடி பழனிச்சாமி, தான்தோன்றித்தனமாக செயல்படுகிறார். தாழ்த்தப்பட்ட எம்.எல்.ஏக்கள் 30பேர் இருக்கிறார்கள். அவர்களை அமைச்சர்களாக்கலாமே.

சிறைக்குச் சென்ற பொதுச்செயலாளர் சசிகலா என்றுமே யாரையும் தவறாகப் பேசியதில்லை. யாரையும் பதவியை விட்டு நீக்கச் சொல்லவில்லை. இப்படிப்பட்ட துரோகிகளாக மாறி விட்டார்கள். எடப்பாடி பழனிசாமியை மக்கள் தூக்கி எறிவார்கள்.

ஒன்றை புரிந்துக்கொள்ளுங்கள், இன்கம்டேக்ஸ் ரெய்டு, எங்களுக்கு மட்டும் இல்லை. உங்களுக்கும்தான்.

 தினகரனின் உருவ பொம்மையை எரிக்க, தமிழகம் முழுக்க காவல்துறை உதவி செய்கிறார்கள். தவறான பாதையில் காவல்துறை செல்கிறது. நடு ஆற்றில் இருக்கும் இந்த ஆட்சியை நம்பி இறங்க வேண்டாம் என இதை டிஜிபி டிகே ராஜேந்திரனுக்கும், அதிகாரிகளுக்குமான எனது அறிவுரை

 

தினகரன் கோஷ்டிதொடர்ந்து பத்திரிக்கையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர்,

கமலுக்குப் பயந்து அமைச்சர் மெயில் ஐடியை அரசு இணையதளத்தில் நீக்கியது தவறு. இந்த ஆட்சியின் முதல்வர் பதவியிலிருந்து இறங்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம். ஆட்சிக்கு எங்கள் அணி வழங்கிய ஆதரவு விலக்கல் கடிதத்தை வழங்கிய விவகாரத்தில், கவர்னர் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்றும்,  எடப்பாடி அணிக்குள்ளேயே ஸ்லீப்பர் செல் இருப்பதாகச் சொல்கிறீர்கலே, என்றதற்கு, இன்று அல்லது நாளை கவர்னர் தனது முடிவை அறிவித்தால் பிரச்சினை தீர்ந்து விடும் என்றார்.  

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நபர் முதல்வர் ஆக்க வேண்டும் எனச் சொல்வதால் சாதி மோதல் தூண்டுவதாக ஆகாதா..?

சமூக நீதி காத்தவர் ஜெயலலிதா.. ஆகவே அவர் சம வாய்ப்புகளை வழங்கி வந்துள்ளார். அதைத்தான் நாங்கள் முன்னெடுக்கிறோம். எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் தற்போது முன் வைக்கிறார்கள்.. இதற்கு முன்பு கண் தெரியவில்லையா. இந்த ஆட்சிக்கு எதிராகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வர்தான் ஊழல் எனச் சொன்னார். அவர் தற்போது எடப்பாடியோடு கூட்டணியில் உள்ளார்.

பி.ஜே.பி ஆளும் மாநிலங்களில், அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள், பாஜகவுக்கு எதிராக வாக்களித்தால் மோடி, அமித்ஷா வரவேற்று பஞ்சாயத்து பேசுவார்களா. ?

தினகரன் தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலும், உள்ளாட்சித்தேர்தலையும் சந்திக்கத் தயார். அரசு பணத்தை எம்ஜிஆர் நூற்றாண்டு விழா என்கிற பெயரில் அரசுப் பணத்தை எடப்பாடி பழனிசாமி அரசு கொள்ளை அடிக்கிறார்கள்” என்றார் காட்டமாக.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள திருச்சி வந்துள்ளார். இந்நிலையில் அவரை பதவி விலகச் சொல்லி பேட்டியளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை உண்டாகி உள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement