Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இரட்டை கொலைக் குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

திருச்சியில் இரட்டைக்கொலைக் குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

இரட்டைக்கொலையில் கொலை செய்யப்பட்டவர்கள்தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த திருசென்னம்பூண்டியைச் சேர்ந்த ரவுடி பஞ்சாபகேசன். இவரை கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி இரவு, அதே ஊரைச் சேர்ந்த செந்தில்குமார், ராஜா, வின்சென்ட் உள்ளிட்டவர்களைக் கொண்ட கும்பல் கொலை செய்துவிட்டு காரில் தப்பிச்சென்றது.

அந்தக் கொலைவழக்கில் கொலையாளிகள் 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள், கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டுவந்த ரவுடி பஞ்சாபகேசனுக்கும், பஞ்சாயத்துத் தலைவர் ரெங்கராஜ் மற்றும் அவரது தம்பி செந்தில்குமாருக்கும் மணல் குவாரியில் கமிஷன் பெறுவதில் பிரச்னை இருந்தது. இந்த விவகாரத்தில், பஞ்சாபகேசன், பஞ்சாயத்துத் தலைவர் ரெங்கராஜையும், அவரது தம்பி செந்தில்குமாரையும் கட்டிவைத்து அவமானப்படுத்தியதாகவும் இதையடுத்து, பஞ்சாபகேசனைக் கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்தனர்.

இந்தக் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கில், ரவுடி பஞ்சாபகேசனின் குடும்பத்தார் வைராக்கியத்துடன் அலைந்தார்கள். பஞ்சாபகேசனும், கொலைக்குக் காரணமான செந்தில்குமாரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அந்தப்பகை இரண்டு சமூகத்துக்கான பகையாக உருமாறியது. இரு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் பகை உணர்ச்சியுடன் சுற்றித்திரியத் தொடங்கினர்.

 

இந்நிலையில், பஞ்சாபகேசன் கொலை வழக்கில், சிறையிலிருந்த குற்றவாளிகள் ஜாமீனில் வெளியே வந்தனர். குற்றம் சாட்டப்பட்ட செந்தில்குமார் மற்றும் வின்சென்ட் ஆகியோர் ஜூன் மாதம் 1-ம் தேதி உறையூரில் நடந்த திருமணத்தில் கலந்துகொண்டு பைக்கில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். அவர் திருச்சி ஓயாமாரி சுடுகாடு அருகே சென்றுகொண்டிருந்தபோது, 3 கார்களில் வந்த மர்மக் கும்பல், செந்தில்குமார், வின்சென்ட் ஆகியோரை வழிமறித்து சரமாரியாக வெட்டியது. இதில், சம்பவ இடத்திலேயே வின்சென்ட் உயிரிழந்தார். உயிர் பிழைப்பதற்காகக் காவிரி ஆற்றுக்குள் குதித்து ஓடிய செந்தில்குமாரை அந்தக்கும்பல் பின்தொடர்ந்து சென்று கொடூரமாக வெட்டிச் சாய்த்தது. இந்த வழக்கில் பஞ்சாபகேசனின் மனைவி சுகந்தி, கனகராஜ், பவுசு செந்தில், வேங்கூர் சரவணன், உடும்பு முருகானந்தம் என 15-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தவழக்கில் பஞ்சாபகேசனின் மனைவி சுகந்தி தலைமறைவாகவே உள்ளார்.

இந்நிலையில் இந்தக் கொலையில் சம்மந்தப்பட்ட கனகராஜன், பவுசு செந்தில் மற்றும் வேங்கூர் சரவணன் உள்ளிட்ட நான்குபேர் மீது, தஞ்சாவூர் மாவட்டம் தோகூர் காவல்நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கு இருப்பதும், இவர்கள் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளதும் தெரியவந்தது. எனவே மேற்படி நபர்களின் தொடர் குற்ற நடவடிக்கையைத் தடுக்கும் பொருட்டு திருச்சி கோட்டைக் காவல் நிலைய ஆய்வாளர் கொடுத்த அறிக்கையைப் பரிசீலனை செய்து திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண், குற்றவாளிகள் நான்கு பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்க ஆணையிட்டார். அதற்கான நகல், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மேலும் பலர் மீது குண்டர் சட்டம் பாயும் எனத் தெரிகிறது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement