Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’திமுக கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வராது!’ - ஸ்டாலின் திட்டவட்டம்

’திமுக கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வராது’ என்று திமுக நிர்வாகி கலைச்செல்வன் மகள் திருமணத்தில் பேசினார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்

”அதிமுகவில் 19 எம்.எல்.ஏ- க்கள் முதல்வர் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக தனித்தனியாக ஆளுநரிடம் அதிமுக அரசுக்கு ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் கொடுத்துள்ளனர். மேலும் தினம்தோறும் ஒவ்வொரு எம்.எல்.ஏ- க்கள் அதிமுக அரசு மீது நம்பிக்கை இழந்துள்ளதாகத் தெரிவித்து வருகின்றனர். ஆனால், எதற்கும் பதில் சொல்லாமல் இழுத்தடித்து வருகிறார். சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும். 

திமுக ஸ்டாலின் திட்டவட்டம்


இல்லையென்றால் திமுக, காங்கிரஸ், முஸ்லிம்லீக் எம்.எல்.ஏ- க்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆளுநரைச் சந்தித்து பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென வலியுறுத்துவோம். ஆளுநர் சட்டமன்றத்தை கூட்ட உத்தரவிட வேண்டும் இல்லாவிட்டால், குடியரசுத் தலைவரிடம் முறையிடுவோம். அதையும் தமிழக கவர்னர் செவிசாய்க்கவில்லையென்றால், நீதிமன்றத்தை நாட இருக்கின்றோம். இந்த ஆட்சியை கவிழ்க்க நானோ, திமுக-வோ எந்தச் சதியிலும் ஈடுபடமாட்டோம். திமுக-வை பொறுத்தவரை கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வரமாட்டோம். தானாகவே இந்த அரசு கவிழும். 

சட்டமன்றத்தில் குட்கா விவகாரத்தை 40 நாள்கள் கழித்து உரிமை மீறல் பிரச்னையாகக் கொண்டு வந்துள்ளனர். நாளை 28ம் தேதி உரிமை மீறல் குழுவைக் கூட்டியுள்ளனர். அந்தக் குழுவில் நானும ஓர் உறுப்பினர். ஆனால், எனக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இதன்மூலம் திமுகவைச் சேர்ந்த 10 உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்துவிட்டு பெரும்பான்மையைக் காட்டுவதற்கு முயற்சி எடுத்தால், அதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்” என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement