Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

லாலு கூட்டத்தின் புகைப்படம் போலியா?

பா.ஜ.க-வுக்கு எதிராக பாட்னாவில் 27-ம் தேதி மாலை லாலு பிரசாத் யாதவ் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தினார். இதில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத், சமாஜ்வாடி கட்சித் தலைவரும், உ.பி- முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். இந்தப் பொதுக்கூட்டம் தொடர்பாக தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் லாலு பிரசாத் ஒரு புகைப்படம் வெளியிட்டிருந்தார். அந்தப் புகைப்படத்தில், பெருமளவு கூட்டம் இருந்ததாகக் காட்டப்பட்டிருக்கிறது. ஆனால், அது பாட்னாவில் முன்பு நடந்த பா.ஜ.க கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று பரபரப்பு எழுந்துள்ளது.

லாலு


போட்டோஷாப் மூலம் எடிட் செய்யப்பட்டு, அதிகக் கூட்டம் இருப்பதுபோல படம் வெளியிடப்பட்டதாக ட்விட்டரில் ஏராளமானோர் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, https://twitter.com/laluprasadrjd என்ற லாலுவின் ட்விட்டர் தளம் முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இன்னொருபுறம், லாலுவைப் பிடிக்காத பா.ஜ.க-வினர், தங்கள் ஆதரவாளர்களைக்கொண்டு சமூக வலைதளங்களில் வேண்டும் என்றே புரளியைக் கிளப்பிவிட்டிருப்பதாக ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியினர் சொல்கின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement