மேற்கு வங்கத்தில் இறைச்சிக்காக மாடு திருட முயன்றதாக இருவர் அடித்துக் கொலை

மாட்டிறைச்சியை வைத்து வட நாட்டில் பல்வேறு வகுப்புவாத சம்பவங்கள் நடந்துவருகின்றன. இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் மாடு திருடச் சென்றதாகக் கூறி, இரண்டு பேர்  அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்கூரி மாவட்டத்தில் உள்ள துப்குரி என்கிற ஊரில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

காவல்துறை அளித்த தகவலின் அடிப்படையில், கொல்லப்பட்டவர்களில் ஒருவர் பெயர் அன்வர் ஹுசைன், மற்றொருவர் ஹபிஜில் சேக் என்றும், இருவரும் அஸ்ஸாமில் உள்ள கூச்பெஹர் மற்றும் துப்ரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.   

இதுகுறித்து துப்குரி பஞ்சாயத்து உறுப்பினர் சுபாஷ் மண்டல், "இந்தப் பகுதியில் அடிக்கடி மாடுகளும் கன்றுகளும் காணாமல் போய்க்கொண்டிருந்தன. எனவே, இதைத் தடுக்க உள்ளூர் மக்களே சேர்ந்து ஒரு பாதுகாப்புப் படை அமைத்துள்ளனர். அவர்கள், இரவுகளில் கால்நடைகளைக் கண்காணித்துவருகிறார்கள். துப்குரியின் அருகில் உள்ள பாரோஹலியா கிராமத்தில் நுழைந்த மூன்று நபர்கள், மாடுகளைத் திருட முயன்றுள்ளனர். அப்போது, கிராம மக்கள் பாதுகாப்புப்படையின் கண்ணில் சிக்கி சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர். அவர்களைப் பிடித்தவுடன் அவர்கள் கூறிய முன்னுக்கு பின் முரணான பதில்களால் அடிக்கத் தொடங்கியுள்ளனர். மூன்று பேரில் ஒருவர் தப்பிவிட, அன்வர் மற்றும் ஹபிஜில் இருவரும் அங்கேயே அடித்துக் கொல்லப்பட்டனர்"  என்று தெரிவித்துள்ளார். காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணைசெய்துவருகின்றனர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!