தினகரனின் அடுத்த டார்கெட் தங்கமணி... மாவட்டச் செயலாளர் பதவி பறிப்பு! | Dinakran removes Minister Thangamani from District secretary

வெளியிடப்பட்ட நேரம்: 12:39 (28/08/2017)

கடைசி தொடர்பு:12:47 (28/08/2017)

தினகரனின் அடுத்த டார்கெட் தங்கமணி... மாவட்டச் செயலாளர் பதவி பறிப்பு!

அ.தி.மு.க-வின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் தங்கமணியை நீக்கி, தினகரன் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தங்கமணி


அ.தி.மு.க-வில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இணைந்த பிறகு, டி.டி.வி. தினகரன் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறார். ஏற்கெனவே, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் வழங்கினர். இதையடுத்து,  தமிழகம் முழுவதுமுள்ள அ.தி.மு.க நிர்வாகிகளை அவர் மாற்றியமைத்துவருகிறார். குறிப்பாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு, சேலம் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியையே அவர் நீக்கினார்.

முக்கியமாக, மேலும் சில அறுவை சிகிச்சைகள் நடத்தப்படும் என்றும் தினகரன் கூறியிருந்தார். இதனால், அ.தி.மு.க-வில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அ.தி.மு.க-வின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் தங்கமணியை நீக்கி, தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தங்கமணி


மேலும், அ.தி.மு.க அமைப்புச் செயலாளராக இருந்த அன்பழகனை, நாமக்கல் மாவட்ட செயலாளராக நியமிப்பதாக தினகரன் கூறியுள்ளார். அதேபோல, கோவை புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து  அமைச்சர் வேலுமணியையும் தினகரன் நீக்கியுள்ளார்.