Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’உணவகங்களில் வாழை இலையை பயன்படுத்தலாமே...!’ - நாம் தமிழரின் கோரிக்கை

பாலித்தீன் தடுப்பை வலியுறுத்தி நாம் தமிழர் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளதுடன், உணவகங்களில் வாழை இலையைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.

பாலித்தீன் எதிர்ப்பு

நாம் தமிழர் கட்சியின் நெல்லை மாவட்டத் தலைவரான செல்வானந்த் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். நெல்லையில் பாலித்தீன் பயன்பாட்டைத் தடுக்க வலியுறுத்தி அவர்கள் மனு அளித்தனர். அதில், ’’நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பேட்டை, டவுன், ஜங்ஷன், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரக்கூடிய பல உணவகங்களில் வாடிக்கையாளர்களுக்கு வாழை இலைகளுக்குப் பதிலாக பாலித்தீன் மூலமாக உணவு பரிமாறப்படுகிறது. 

தேநீர் கடைகளில் பாலித்தீன் கவர்கள் மூலமாக பார்சல் டீ விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன், உணவுகளை பார்சலில் கட்டும்போதும் பாலித்தீன் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இப்படி, சூடான உணவுப் பொருள்களை பாலித்தீன் பைகளில் கட்டுவதால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படும் ஆபத்து உள்ளது. அத்துடன், மாநகரப் பகுதிகள் முழுவதும் பாலித்தீன் குப்பைகளாக நிறைந்து கிடக்கிறது. இதனால் நகரத்தின் தூய்மை சீர்கெடுவதுடன், சுகாதாரச் சீர்கேடும் ஏற்படுகிறது. 

வாழை இலை வலியுறுத்தல்

பெரிய உணவகங்கள் மட்டும் அல்லாமல் சாலையோர உணவகங்களிலும் பாலித்தீன் பைகளே பயன்படுத்தப்படுகின்றன. அதனால் பொதுமக்கள் நலன் கருதியும் மாநகரத்தின் தூய்மையைக் காத்திடும் வகையிலும் உணவகங்கள் அனைத்திலும் அதிரடி சோதனை நடத்தி பாலித்தீன் பைகளைப் பறிமுதல் செய்ய வேண்டும். அதைப் பயன்படுத்தும் கடைகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும். அத்துடன், அனைத்து உணவகங்களிலும் வாழை இலையைப் பயன்படுத்த உத்தரவிட வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளனர்.     

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement