Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டாஸ்மாக் கடையை மூடக்கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்!

டாஸ்மாக் எதிர்ப்பு

நெல்லை மாநகரில் புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி அப்பகுதிப் பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

நெல்லை மாநகரில் தச்சநல்லூர் அருகே ஊருடையான் குடியிருப்பு கிராமத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. இந்தக் கிராமத்தின் அருகே வயல் வெளியில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனால், அந்தப் பகுதி வழியாக பொதுமக்கள் நடமாட முடியாத நிலை உருவாகி இருக்கிறது. அதன் காரணமாக அதிருப்தியடைந்த அப்பகுதிப் பெண்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுபானக் கடையை அகற்றக்கோரி கோஷங்களையும் எழுப்பினர். 

முற்றுகை

பின்னர் அவர்கள் கூறுகையில், ‘’நாங்கள் விவசாயக் கூலித் தொழில் செய்து வருகிறோம். தற்போது மழை இல்லாததால் விவசாயம் நலிவடைந்த போதிலும் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறோம். கடந்த 19997-ல் இந்தப் பகுதியில் நடந்த சாதிச் சண்டை காரணமாக பெரும் பாதிப்புக்கு உள்ளான நிலையில் அதில் இருந்து மீண்டு தற்போது அனைத்து தரப்பினரும் இணக்கமாக வாழ்ந்து வருகிறோம். 

தற்போது எங்கள் குடியிருப்பு அருகே மதுக்கடை திறக்கப்பட்டிருக்கிறது. இதனால், அந்த வழியாக பள்ளிக் குழந்தைகள் செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. அந்த வழியாகச் செல்லும் பெண்களிடம் குடிகாரர்கள் போதையில் வம்பு இழுப்பதும் கிண்டல் செய்வதுமாக உள்ளனர். மதுக்கடையானது வயல் வெளியில் அமைந்துள்ளதால் குடிகாரர்கள் மதுபாட்டில்களை வயல்களில் வீசி சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்கிறார்கள். அருகில் இருக்கும் நடுநிலைப் பள்ளியில் இரவு நேரத்தில் குடித்துவிட்டு பாட்டில்களை அங்கேயே உடைத்துச் செல்லும் அராஜகமும் நடக்கிறது. அதனால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதால் மதுக்கடையை அடைக்க வலியுறுத்துகிறோம்’’ எனத் தெரிவித்தனர்.

பா.ஜ எதிர்ப்பு

இதே போல, சேரன்மகாதேவி ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுக்குடி மற்றும் வீரவநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுக்குடி ஆகிய இடங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் சிலர் சேர்ந்து புதிய கட்டடம் கட்டி அதில் டாஸ்மாக் மதுபானக் கடையைக் கொண்டுவர முயற்சி செய்து வருகிறார்கள். அந்தப் பகுதிகளில் மதுக்கடை அமைந்தால் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படும். பொதுமக்களிடம் தேவையற்ற சண்டைகள் உருவாகும் என்பதால் அங்கு மதுக்கடை அமைக்க அனுமதிக்கக் கூடாது என பாரதிய ஜனதா கட்சியின் ஒன்றியத் தலைவரான சண்முகவேலு தலைமையில் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement