Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நர்மதா போராளி மேதாபட்கர் பாதுகாப்புக் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

நர்மதா நதியில் அணை கட்டக்கூடாது என்பதற்காக தொடர்போராட்டம் நடத்திவரும் மேதாபட்கர் மீதான வழக்கை வாபஸ் வாங்கவும், பாதிக்கப்பட்ட மூன்று மாநில மக்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவித்த இழப்பீட்டை வழங்கவேண்டுமென்றும் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மேதா பட்கர்


'நர்மதா போராளி மேதாபட்கர் பாதுகாப்புக் கூட்டமைப்பு' சார்பாக குரு தியேட்டர் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கண்காணிப்பக ஹென்றிடிபேன், எவிடென்ஸ்கதிர், செல்வகோமதி, விசிக, ம.தி.மு.க, சி.பி.ஐ, ம.ம.க, எஸ்.டி.பி.ஐ, ஆதித்தமிழர்பேரவை, போன்ற பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

''இந்தியாவின் பெரியநதியான நர்மதா, மத்திய பிரதேசத்தில் தொடங்கி குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் 1312 கி.மீ தூரம் பயணிக்கிறது. தனியார் நிறுவனங்கள் மின்உறபத்தி செய்வதற்காகத் தொடர்ந்து அணையின் உயரத்தினை அரசு உயர்த்திவருகிறது. இதனால்,  லட்சக்கணக்கான மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்படுகிறார்கள்.

இவர்களுக்காக தொடர்ந்து போராடிவரும் மேதாபட்கரின் முயற்சியால் காங்கிரஸ் ஆட்சியில் இத்திட்டம் நிறுத்தப்பட்டது.  உச்சநீதிமன்றம் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தலா 60 லட்சம் வழங்க உத்தரவிட்டது. இந்தநிலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய மேதாபட்கரை பதினேழு நாள்கள் சிறையில் அடைத்து தற்போது பிணையில் விட்டுள்ளனர். தொடர்ந்து நர்மதா அணைதிட்டத்துக்கு எதிராக மகாராஷ்டிராவில் மக்கள் போராடிவருகிறார்கள். அவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இங்கு போராட்டம் செய்கிறோம்'' என்று பேசினார்கள். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement