வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (28/08/2017)

கடைசி தொடர்பு:16:15 (28/08/2017)

'த.மு.எ.க.ச இலக்கிய விருதுகள் அறிவிப்பு..!' செப்டம்பர் 16-ல் விருது வழங்கும் விழா

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 2016-ம் ஆண்டுக்கான சிறந்த கலை இலக்கிய நூல்களுக்கான பரிசுக்குத் தேர்வான நூல்களின் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 16-ம் தேதி நாகர்கோவில் நகரில் விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.

வெங்கடேசன்


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், ஆண்டுதோறும் சிறந்த கலை இலக்கிய நூல்களுக்கான பரிசுகளை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, கடந்த 2016-ம் ஆண்டில் வெளியான சிறந்த கலை இலக்கிய நூல்களுக்கான நடுவர் குழு முடிவுகளை சங்கத்தின் தலைவர் ச.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் சு.வெங்கடேசன் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

அதன் விவரம் வருமாறு :

சிறந்த நாவலுக்கான தோழர் கே.பி.பாலச்சந்தர் நினைவு விருது, நூல் : 'முகிலினி',  நூலாசிரியர் : இரா.முருகவேள்,  பதிப்பகம் : பொன்னுலகம்.

சிறந்த கவிதை நூலுக்கான வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன்- செல்லம்மாள் ப.ஜெகந்நாதன் நினைவு விருது, நூல் : 'ஆதிமுகத்தின் காலப் பிரதி', நூலாசிரியர் : இரா.பூபாளன்,  பதிப்பகம் : பொள்ளாச்சி இலக்கிய வட்டம்.

சிறந்த சிறுகதை நூலுக்கான அகிலா சேதுராமன் நினைவு விருது, நூல் : 'தாழிடப்பட்ட கதவுகள்', நூலாசிரியர் : அ.கரீம், பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்.

சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான வ.சுப.மாணிக்கனார் நினைவு விருது, நூல் : 'பயங்கரவாதியெனப் புனையப்பட்டேன்', மொழிபெயர்ப்பாளர் : அப்பணசாமி, பதிப்பகம் : எதிர் வெளியீடு.

சிறந்த விளிம்புநிலை மக்கள் படைப்புக்கான  அமரர் சு.சமுத்திரம் நினைவு விருது, நூல் : 'தீண்டாமைக்குள் தீண்டாமை' : புதிரை வண்ணார் வாழ்வும் இருப்பும், நூலாசிரியர் : சி. லஷ்மணன்- கோ.ரகுபதி, பதிப்பகம் : புலம் வெளியீடு.

சிறந்த கலை இலக்கிய விமர்சன நூலுக்கான தோழர்.இரா.நாகசுந்தரம் நினைவு விருது, நூல் : 'மணிமேகலை பன்நோக்கு வாசிப்பு', நூலாசிரியர் : முனைவர் கா.அய்யப்பன், பதிப்பகம் : காவ்யா பதிப்பகம்.

சிறந்த தொன்மைசார் நூலுக்கான தோழர் கே.முத்தையா நினைவு விருது, நூல் : 'சிந்துவெளி பண்பாட்டின் திராவிட அடித்தளம்', நூலாசிரியர் : ஆர்.பாலகிருஷ்ணன், பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்.

த.மு.எ.க.ச வழங்கும் கு.சி.பா அறக்கட்டளை விருதுகள்:

சிறந்த குழந்தைகள் இலக்கியத்திற்கான விருது, நூல் : 'மாயக்கண்ணாடி', நூலாசிரியர் : உதயஷங்கர், பதிப்பகம் : நூல்வனம்.

சிறந்த மொழிவளர்ச்சிக்கு உதவும் நூலுக்கான விருது, நூல் : 'எழுக, நீ புலவன்!', நூலாசிரியர் : ஆ. இரா.வேங்கடாசலபதி, பதிப்பகம் : காலச்சுவடு.

வரும், செப்டம்பர் 16 -ம் தேதி சனிக்கிழமையன்று விருது வழங்கும் விழாவும், நூல்கள்குறித்த ஆய்வரங்கமும் நாகர்கோவில் நகரில் நடைபெறுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க