சவால்விட்ட அமைச்சருக்குக் கல்தா கொடுத்த தினகரன்! | TTV dinakaran expelled vellamandi natarajan from his post

வெளியிடப்பட்ட நேரம்: 14:37 (28/08/2017)

கடைசி தொடர்பு:14:41 (28/08/2017)

சவால்விட்ட அமைச்சருக்குக் கல்தா கொடுத்த தினகரன்!

முடிந்தால் என்னை நீக்கிப் பார் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நேற்று தினகரனுக்கு சவால் விட்டார். இதனை அடுத்து இன்று திருச்சி மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து எம்.பி இரத்தினவேல் ஆகியோரை நீக்கி டி.டி.வி.தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கையோடு, அதிமுகவில் திருச்சி அணியை மூன்றாகப் பிரித்த தினகரன், திருச்சி வடக்கு மாவட்டத்துக்கு முன்னாள் அரசு தலைமைக்கொறடா மனோகரனையும், திருச்சி மாநகர் மாவட்டத்துக்கு முன்னாள் திருச்சி துணை மேயர் சீனிவாசனையும், தெற்கு மாவட்டம் முன்னாள்  எம்.எல்.ஏ ராஜசேகரையும் மாவட்டச் செயலாளர்களாக நியமனம் செய்து தினகரன் அறிவித்தார்.