Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'தமிழக அரசால் எங்கள் வாழ்வாதாரம் பாதிப்பு'- குமுறும் டெல்டா விவசாயிகள்

உரிய நேரத்தில் காவிரி தண்ணீர் கிடைக்காததால் கடந்த 5 ஆண்டுகளாக காவிரி டெல்டாவில் குறுவை நெல் சாகுபடி நடைபெறவில்லை. இந்த ஆண்டும் இதே நிலை நீடிக்கிறது. தமிழக அரசின் அலட்சியத்தால்தான் தங்களுக்கு இந்த இக்கட்டான நிலை உருவாகியுள்ளதாக இப்பகுதி விவசாயிகள் ஆதங்கப்படுகிறார்கள்.

        

”வழக்கமாகக் குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலும் இது கானல் நீராகவே இருந்து வருகிறது. தமிழகத்துக்கு சட்டப்படி தர வேண்டிய காவிரி நீரை கர்நாடகம் உரிய நேரத்தில் கொடுக்காததால் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறப்பு என்பது பல ஆண்டுகள் ஏமாற்றத்தில்தான் முடிந்திருக்கிறது. தற்போது கர்நாடகாவில் தென்மேற்குப் பருவ மழை ஓரளவுக்கு நிறைவாக பெய்திருக்கிறது. ஆனாலும், அங்கிருந்து வினாடிக்கு அதிகபட்சம் 7 ஆயிரம் கன அடிதான் தண்ணீர் திறக்கப்படுகிறது.

இந்தத் தண்ணீரையும்கூட அங்கிருக்கும் விவசாயிகளே பாசனத்துக்கு எடுத்துக்கொள்கிறார்கள். தற்போது மேட்டூர் அணையில் 45 அடி உயரத்துக்கு தண்ணீர் உள்ளது. 90 அடியை எட்டினால்தான், காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியும். எப்போது மேட்டூர் அணை திறக்கப்படும் என தமிழக அரசு தெளிவான அறிவிப்பு செய்யாததால், விவசாயிகள் குறுவை சாகுபடிக்கான பணிகளை மேற்கொள்ளாமலே இருக்கிறார்கள். காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக லேசான மழை பெய்திருக்கிறது.

இதைக்கொண்டு நேரடி விதைப்பு செய்ய முடியும். ஆனாலும், விவசாயிகள் குழப்பத்தில் இருந்ததால் நேரடி விதைப்புப் பணிகளை மேற்கொள்ளவில்லை. இதற்குக் காரணம் தமிழக அரசுதான் எனக் குற்றம் சாட்டுகிறார்கள். மேட்டூர் அணை திறக்க தாமதமாகும் என்றும் மழையைப் பயன்படுத்தி நேரடி விதைப்பு செய்யுங்கள் என்றும் தமிழக அரசு முன்கூட்டியே அறிவிக்காததால் தங்களது நிலங்களை வெறும் தரிசாகவே வைத்திருக்கிறோம். இதனால் இந்த ஆண்டும் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது” என ஆதங்கப்படுகிறார்கள்.                                 

வறட்சி காரணமாக 2016-இல் மட்டும் மத்தியப் பிரதேசத்தில் 1,600-க்கும் மேற்பட்டவிவசாயிகள் உயிரிழந்துள்ளதாக அரசின் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. 2011 - 2015-ம் ஆண்டுகளில் மட்டும்  6,076 பேர்  உயிரிழந்துள்ளதாகத் தேசியக் குற்றப் பிரிவு ஆவணக் காப்பகம் தெரிவிக்கிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement