Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விநாயகர் சிலையைக் கரைக்க முயன்றபோது வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்!

சென்னையில் விநாயகர் சிலையைக் கரைக்க முயன்றவர், திடீரென கிணற்றில் மூடப்பட்டிருந்த கான்கிரீட் இடிந்து தவறி விழுந்தார். அவரை, தீயணைப்பு வீரர்கள் போராடி உயிருடன் மீட்டனர்.

சென்னை முகப்பேறு பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். விநாயகர் சதூர்த்தியையொட்டி தனது வீட்டில் விநாயகர் சிலை வைத்திருந்தார் லோகாநாதன். பிறகு விநாயகர் சிலையைக் கரைக்க முகப்பேர் மேற்கு, பாரதிசாலை, ஒன்றாவது குறுக்குச் சந்தில் உள்ள கிணற்றுக்குச் சென்றார். கிணற்றுக்குள் விநாயகர் சிலையை அவர் போட்டபோது, தவறி விழுந்தார். கிணற்றுக்குள் தண்ணீர் இருந்ததால் உயிருக்கு அவர் போராடினார். ’காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்’ என்று சத்தம் போட்டார். அதைக் கேட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கிணற்றை எட்டிப்பார்த்தனர்.

அப்போது, கிணற்றுக்குள் ஒருவர் உயிருக்குப் போராடுவதைப் பார்த்த மக்கள், உடனடியாகத் தீயணைப்பு நிலையத்துக்கும் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ராட்சத கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கிய வீரர்கள், உயிருக்குப் போராடிய லோகநாதனை மீட்டனர். முதலுதவி அளிக்கப்பட்டு உடனடியாக லோகநாதன், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். துரிதமாகச் செயல்பட்ட தீயணைப்பு வீரர்களைப் பொதுமக்கள் பாராட்டினர்.
 
இதுகுறித்து தீயணைப்பு வீரர்கள் கூறுகையில், "30 அடி அகலம், 60 அடி ஆழம் கொண்ட கிணற்றை யாரும் பயன்படுத்துவதில்லை. பாழடைந்த அந்தக் கிணற்றில் விநாயகர் சிலையைக் கரைக்க லோகநாதன் சென்றுள்ளார். அப்போது, கிணற்றை மூடிய கான்கிரீட் இடிந்து விழுந்துள்ளது. இதனால், லோகநாதன் தவறி விழுந்துள்ளார். எங்களுக்குத் தகவல் கிடைத்ததும் ராட்சத ஏணி மூலம் அவரை மீட்டெடுக்க முதலில் முடிவு செய்தோம். ஆனால், ஏணியின் உயரம் குறைவாக இருந்தது. இதனால் நீச்சல் தெரிந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு மூலம் உள்ளே இறங்கினர். பிறகு லோகநாதனைக் காப்பாற்றி வெளியில் கொண்டுவந்தோம். கிணற்றில் தண்ணீர் இருந்ததால் லோகநாதனுக்கு காயங்கள் ஏற்படவில்லை. இருப்பினும் தண்ணீரில் அவர் மூழ்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது" என்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement