வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (28/08/2017)

கடைசி தொடர்பு:18:00 (28/08/2017)

மதுரைக்கு வந்த இலங்கை எம்.பி சீனிதம்பி யோகேஸ்வரன்

இலங்கை மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் மதுரையில்செய்தியாளர்களைச் சந்தித்தார்.

''தமிழக மீனவர் பிரச்னை நீண்டநாள்களாகத் தொடர்கிறது. இதில் இருநாட்டு மீனவர்கள் பேசினால் பிரச்னை தீராது. இருநாட்டு அரசும்  பேசி, சுமுகமாக எல்லையைப் பிரித்தால்தான் பிரச்னை தீரும். தமிழக மீனவர்கள் வறுமை நிலையில் உள்ளவர்கள் மனிதாபிமான அடிப்படையில், இலங்கை அரசு படகுகளை விடுவிக்க வேண்டும். ஜெயலலிதா இலங்கை மக்களுக்காக தமிழக சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர். அவர் இல்லாத நேரத்தில் அக்கட்சியினர் ஒற்றுமையோடு செயல்பட்டு இலங்கை மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்.

yogeshwaran

போரின்போது காணாமல் போனவர்கள் பற்றி அறிய ஐ.நா சபை உத்தரவிட்டபோதும், அவர்கள் நிலை என்னவென்று தெரியவில்லை. பல நாடுகள் விடுதலைப்புலிகள் மீது விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வடக்கு மாகாணங்களில் ராணுவம் இன்னும் முகாமிட்டுள்ளது. நிலங்களை இழந்தவர்களுக்கு மீட்டுத் தர முயன்று வருகிறோம். அகதிகள் முகாமுக்குச் செல்ல தமிழக காவல் துறையினர் என்னை அனுமதிப்பதில்லை.

இலங்கைக்கு எங்கள் மக்கள் திரும்பும்வரை அவர்களைப் பாதுகாப்பாகவும் அன்போடும் கவனித்துக்கொள்ள தமிழக அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன். தமிழக மக்களும் தமிழக அரசியல்வாதிகளும் எங்களுக்குக் குரல் கொடுக்கிறார்கள். அதேநேரம் சில அரசியல் கட்சித்தலைவர்கள் சுயநலத்துக்காக எங்களைப் பயன்படுத்துகிறார்கள்'' என்று இருநாட்டு அரசியல் நிலையையும் கலந்து பேசினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க