வேளாங்கண்ணி பேராலய திருவிழாவின் பெருமைமிகு நிகழ்ச்சிகள்

பேதமில்லாமல் எல்லோரும் கொண்டாடும் நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆண்டுத் திருவிழா நாளை (29.08.2017) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் சிறப்பாக நடைபெறவுள்ளது.  

முதல்நாள் மாலை பேராலய முகப்பிலிருந்து புனிதக் கொடி ஊர்வலமாக கடைத்தெரு, கடற்கரைச்சாலை, ஆரியநாட்டுத்தெரு வழியாக மீண்டும் பேராலய முகப்பில் வந்துசேரும். மாலை 6.20 மணி முதல் 6.40-க்குள் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் புனிதக் கொடியை புனிதம் செய்துகொடுக்க, அதன்பின் கொடிமரத்தில் கொடி ஏற்றப்படும். கொடி ஏற்றப்பட்ட உடனே பேராலய கோபுரங்களில் மின்னொளி அலங்கார விலக்குகள் எரியவிடப்படும். அதே நேரம் பேராலயத்தின் பின்புறம், விண்ணில் கண்ணைக்கவரும் வண்ண வானவேடிக்கை நடைபெறும். பின்னர், பேராலய கலையரங்கத்தில் பேராலய அதிபர் பிரபாகரன் அடிகளார் முன்னிலையில், தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் தலைமையில் சிறப்புக் கூட்டுத்திருப்பலி நடைபெறும்.  

விழா நாள்களில் தினந்தோறும் காலை 5.00 மணியளவில் பேராலயத்தில் தமிழில் திருப்பலியும், விண்மீன் கோயிலில் காலை 7.15 மணியளவில் மராத்தியிலும், காலை 10.00 மணியளவில் தமிழிலும், மாலை 3.30 மணி முதல் 5.30 மணி வரையில் தமிழில் அருங்கொடை ஜெபத்திருப்பலியும் நடைபெறும். இரவு 8.00 மணியளவில் அலங்கார விளக்குகளுடன் மாதா திருத்தேர் பவனி உலாவரும். செப்டம்பர் 7-ம் தேதி மாலை 5.15 மணியளவில் பேராலய கலையரங்கத்தில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டுத்திருப்பலியும், இரவில் மின்னொளி அலங்காரத்தில் பெரிய தேர் பவனி நடைபெறும். செப்டம்பர் 8-ம் தேதி காலை 6.00 மணியளவில் மாதாவின் பிறந்தநாளை முன்னிட்டு விண்மீன் கோயிலில் சிறப்பு கூட்டுத்திருப்பலியும், மாலை 6.00 மணியளவில் அன்னையின் திருக்கொடி இறக்கப்பட்டு விழா இனிதே நிறைவு பெரும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!