குட்கா விவகாரம் - தி.மு.க உறுப்பினர்கள் 21 பேருக்கு நோட்டீஸ்! | Assembly privilege committee issues notice to 21 DMK Mla's on Gutkha issue

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (28/08/2017)

கடைசி தொடர்பு:20:22 (28/08/2017)

குட்கா விவகாரம் - தி.மு.க உறுப்பினர்கள் 21 பேருக்கு நோட்டீஸ்!

சட்டப்பேரவைக்குத் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருள்களை எடுத்து வந்தது தொடர்பாக விளக்கமளிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 தி.மு.க. உறுப்பினர்களுக்குப் பேரவை உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 


தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருள்கள் தாராளமாக விற்கப்படுவதாகக் கூறி கடந்த ஜூலை 18-ம் தேதி சட்டப்பேரவையில் அந்தப் பொருள்களைத் தி.மு.க உறுப்பினர்கள் கொண்டுவந்தனர். இது அவையின் மாண்பை மீறும் செயல் என்று கூறி இந்த விவகாரம் பேரவையின் உரிமைக் குழு விசாரணைக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. இதுதொடர்பாகத் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் அவை உரிமைக்குழு கூடி விசாரித்தது. பேரவைக்கு ஜூலை 18-ம் தேதி குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட பொருள்களைக் கொண்டுவந்தது தொடர்பாக செப்டம்பர் 5-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட
21 தி.மு.க உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. உரிமைக் குழு உறுப்பினராக உள்ள தமக்கு கூட்டத்துக்கான அழைப்பு இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.  


[X] Close

[X] Close